Back
artical-details

நாம் எப்போது சுற்றுலா செல்ல வேண்டும்?

  • date : 2024-02-25
  • Category : Tourism

சுற்றுலா பயணிகளுக்கான அறிவிப்பு 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு வித்தியாசமான வானிலை நிலவும். சுற்றுலா செல்வதற்கு முன்பு நாம் செல்ல கூடிய இடத்தின் வானிலையை அறிந்தே நாம் பயணம் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் நாம் சுற்றுலா சென்றதற்கான அர்த்தம் இல்லாமல் போய் விடும். 

தற்போது கோடைகாலம் ஆரம்பம் ஆக உள்ளது. இந்த நேரத்தில் வெயிலுக்கு இதமாக எங்கு செல்லலாம் என்று மக்கள் நினைப்பதுண்டு. பொதுவாக கோடைகாலங்களில் மக்கள் மூணாறு வால்பாறை ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்ளை நோக்கி மக்கள் படையெடுப்பார்கள். மார்ச் ஏப்ரல் மாதங்களில் பொதுவாக மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வறண்ட கிழக்கு திசை காற்று வீசும் என்பதால் தமிழகம் கேரளாவில் உள்ள  மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் வெயில் கொளுத்தும். சில இடங்களில் காட்டுத்தீ கூட ஏற்படுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

குறிப்பாக மார்ச் ஏப்ரல் மாதங்களில் வால்பாறை  கோயம்புத்தூர் தென்காசி தேனி ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் வெயில் அதிகமாக இருக்கும்.கேரளாவிலும் இந்த நேரத்தில் வெப்பம் அதிகம் இருக்கும் என்பதால் அங்கு செல்வதை தவிர்க்கலாம். மார்ச் ஏப்ரல் மாதங்களில் மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்ப்பதே நல்லது. 

பிப்ரவரி மார்ச் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்கள் தமிழக கடலோர பகுதிகளுக்கு சுற்றுலா செல்லலாம். ஏனெனில் கிழக்கு திசை காற்று வீசும் என்பதால் கடலோரங்களில் இதமான தென்றல் காற்றும் மிதமான வெயிலே காணப்படும். குறிப்பாக வேளாங்கண்ணி கோடியக்கரை பாம்பன் தூத்துக்குடி இராமேஷ்வரம் திருச்செந்தூர் மணப்பாடு உவரி கன்னியாகுமரி ஆகிய கடலோர பகுதியில் வெப்பநிலை குறைவாக இருக்கும். சில நாட்கள் மலைப்பகுதிகளை விட இங்கு வெப்பநிலை குறைவாக பதிவாகும். கடலை விரும்பும் மக்கள் நிச்சயமாக ஒருமுறையாவது பிப்ரவரி மார்ச் மாதம் கடலோரங்களுக்கு சென்று பாருங்கள் உங்கள் பகுதியை விட இங்கு வெப்பநிலை குறைவு என்பதை உணர்வீர்கள்.

மலைப்பகுதிக்கு எப்போது செல்லலாம்?

ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டமே தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு செல்ல அற்புதமான நாட்கள் ஆகும். ஏனெனில் தென் மேற்கு பருவமழை காலம் என்பதால் இதமான தென்றல் காற்று மேற்கு தொடர்ச்சி மலையை தவழும் மேககூட்டங்கள் சிலுசிலுவென்று மழை என ரம்மியமாக காட்சியளிக்கும். குமரி தென்காசி நெல்லை தேனி கோவை நீலகிரி மூணாறு வயநாடு வாகமண் குமுளி மேகமலை கொலுக்குமலை வால்பாறை  உள்ளிட்ட பகுதிகளுக்கு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்திலே சுற்றுலா செல்ல வேண்டும். ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான இதே காலத்தில் தமிழக கடலோரங்களுக்கு சுற்றுலா செல்ல கூடாது ஏனெனில் தென் மேற்கு பருவமழை வலுகுறைந்த நேரத்தில் ஈரப்பதம் இல்லாத வறண்ட தென்மேற்கு திசை காற்று கடலோர பகுதியை நோக்கி வீசும் மேலும் கடல் காற்று உள்ளே நுழையாமல் இருக்கும் என்பதால் மேற்கண்ட நான்கு மாதங்களிலும் கடலோர மாவட்டங்களில் கடும் வெயில் நிலவும்.

அக்டோபர் நவம்பர் டிசம்பர் ஜனவரி ஆகிய நான்கு மாதங்களில் சுற்றுலா செல்ல விருப்பம் உள்ளவர்கள் நீங்கள் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஏனெனில் அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் தமிழகம் கேரளாவில் வெப்பநிலை குறைவாகவே இருக்கும். 


தற்போது கோடைகாலம் ஆரம்பம் ஆக உள்ளதால் இந்த நேரத்தில் நீங்கள் சுற்றுலா செல்ல ஏற்ற இடம் கடலோர பகுதிகள் தான். வாய்ப்பு கிடைத்தால் வேளாங்கண்ணி கோடியக்கரை இராமேஷ்வரம் தனுஷ்கோடி திருச்செந்தூர் கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு செல்லுங்கள்.

Write Reviews

0 reviews