treeplantation

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி சைக்கிள் பயணம்

  • time: 2025-02-18

பிளாஸ்டிக் என்பது நம் வாழ்வின் பெரும் அங்கம் என்பதை நாம் அறிவோம்.அவற்றைப் பயன்படுத்தி முடித்தவுடன் அலட்சியமாக வீசுகிறோம். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை குறைக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த சிவ பிரகாஷ் என்ற இளைஞர்  லடாக் நேபாளம் நாட்டிற்கு சைக்கிளில் செல்கிறார்.

கூடலூர் ஊட்டியில் இருந்து கன்னியாகுமரி வருகைதரும் சிவபிரகாஷ் அங்கிருந்து பல்வேறு மாநிலங்களை கடந்து லடாக் நேபாளம் நாட்டிற்கு சைக்கிளில் செல்கிறார்.கூடலூர் பகுதியில் இருந்து  இருந்து லடாக் சென்று திரும்பும் தூரம் 9000 கிலோ மீட்டர். இது மிகவும் கடினமாக இருந்தாலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பயணம் மேற்கொள்வது ஆச்சர்யத்தை அளிக்கிறது.

 பிளாஸ்டிக்கின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் விளைவுகளைப் பற்றி பொதுமக்களுக்கு கற்பிப்பது கட்டாயமாகிறது. இவர் ஏற்படுத்தும் இந்த விழிப்புணர்வு பயணம் பிளாஸ்டிக் பயன்பாட்டை உணர்வுபூர்வமாகக் குறைக்கவும், சுற்றுச்சூழலைக் காப்பாற்றவும் அவர்களை ஊக்குவிக்கும்.

சிவபிரகாஷ் சைக்கிள் பயணம் வெற்றி பெற நமது வானிலை பக்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.