weather-over-tamilnadu

நாட்டிலேயே அதிகமழையை பெற்ற திருநெல்வேலி

  • time: 2025-03-23

தென் மாவட்டங்களை விடாது துரத்தும் மழை 

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த மூன்று மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை முடிவடைந்த பின்னரும் கடந்த ஜனவரி பிப்ரவரி மாதத்தில் தென் மாவட்டங்கள் நல்ல மழையை பெற்றது. தற்போது கோடைகாலமான மார்ச் மாதத்திலும் மழை தொடர்கிறது. 


கவனம் பெறும் தென் மாவட்டங்கள்.நாட்டிலேயே அதிகமழையை பெற்ற தென் மாவட்டங்கள். 


தற்போது ஜனவரி 1 முதல் இன்று மார்ச் 23 வரையிலான காலத்தில் இந்திய நாட்டிலேயே மிக அதிகமான மழை நெல்லை மாவட்டம் மாஞ்சோலையை அடுத்த ஊத்து 1620 மிமீ மழையை பெற்றுள்ளது. அதன் பின்னர் நாலுமுக்கு 1424 மிமீ மழையும் காக்காச்சி 1225 மிமீ மழையும் பெற்றுள்ளது. 

தமிழ்நாட்டில் இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை தென்காசி ஆகிய 4 தென் மாவட்டங்கள் கடந்த மூன்று மாதங்களாகவே அதிகமழையை பெற்றிருக்கிறது. ஜனவரி 1 முதல் இன்று வரையிலான காலத்தில்  இராமேஷ்வரம் 464 மிமீ மழையும் தங்கச்சி மடம் 445 மிமீ மழையும் பெற்றிருக்கிறது. அதே போல தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி 239 மிமீ மழையும் தென்காசி மாவட்டம் ராமநதி அணை பகுதி 228 மிமீ மழையும் பெற்றிருக்கிறது.  தென் மாவட்டங்களை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்டங்களும்  நல்ல மழையை பெற்றிருக்கிறது. 


அதிகமழையை பெற இருக்கும் தென் மாவட்டங்கள் : தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமழைக்கு வாய்ப்பு 


தமிழகம் முழுவதும் கோடைவெயில் கொளுத்தி வரும் நிலையில் தென் மாவட்டங்களின் வெப்பநிலை தொடர்ந்து இயல்பை விட குறைவாகவே பதிவாகி வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி நெல்லை தென்காசி இராமநாதபுரம் மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களாகவே இயல்பை விட வெப்பநிலை குறைந்துள்ளது. 

மார்ச் மாதத்தை பொறுத்தவரை திடீர் மழை  வெயில் வானம் மேகமூட்டம் இவ்வாறு தொடர்ந்து வானிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடலோர பகுதியிலும் வடகிழக்கு பருவமழை காலம் போல மழை பெய்கிறது. இதே நிலை தொடரும். 

வரும் ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை உயர்ந்தாலும் தென் மாவட்டங்களில் கோடைமழை தீவிரமடையும். தூத்துக்குடி நெல்லை தென்காசி இராமநாதபுரம் கன்னியாகுமரி விருதுநகர் மதுரை தேனி ஆகிய தென் மாவட்டங்களில் ஏப்ரல் மாதத்தில் கோடைமழை தீவிரமாக இருக்கும். திண்டுக்கல் கோவை திருப்பூர் நீலகிரி சிவகங்கை சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களும் கணிசமான மழையை பெறும். 

தென் மாவட்ட மக்களே உங்களுக்கு மே மாதத்திலும் தீவிர கோடைமழை பெய்யும் குறிப்பாக தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மே மாதத்திலும் நல்லமழை பொழிவை எதிர்பார்க்கலாம். நன்றி 

-Tenkasi Weatherman.

 

weather-over-tamilnadu

கோயம்புத்தூர் திண்டுக்கல் நெல்லை தென்காசி கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2025-03-23

கோயம்புத்தூர் கனமழைக்கு வாய்ப்பு 


இன்று உலக வானிலை ஆராய்ச்சி தினம் (World Meteorological day)

மார்ச் 23ஆம் தேதி உலக வானிலை நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. வானிலை ஆய்வாளர்களின் சேவை, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நலனுக்க அவர்கள் எந்த வகையில் உதவியாக இருக்கிறார்கள் என்பது குறித்து இந்த நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

 இயற்கை சீற்றங்களாலும், மோசமான காற்றின் தரத்தாலும் உலகில் பல்வேறு பகுதிகளில் ஆபத்தான சூழ்நிலை உருவாகியுள்ளது. அத்துடன பூமிபரப்பும் வழக்கத்தை விட வெப்பமடைந்து வருகிறது. இதன் தாக்கத்தை அனைவரும் உணர்வார்கள். இது ஒரு புறம் இருக்க மழையின் அளவில் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுவதுடன் வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளை சமாளிக்கவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிசெய்வதற்கு முன்னெச்சரிக்கைகள் தருவதில் வானிலை ஆய்வாளர்களின் பங்கு முக்கியமாக உள்ளது.

இன்றைய தினம் கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் திண்டுக்கல் கன்னியாகுமரி நெல்லை தென்காசி தூத்துக்குடி விருதுநகர் மதுரை தேனி சேலம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். கனமழையை பொறுத்தவரை கோயம்புத்தூர் திருப்பூர் திண்டுக்கல் நெல்லை தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கும் வாய்ப்பு. 

இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும்.ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்யும். தூத்துக்குடி திருச்செந்தூர் உள்ளிட்ட கடலோர பகுதி மக்களும் பகல் நேரத்தில் மழை எதிர்பார்க்க வேண்டாம்.

-Tenkasi Weatherman.

 

weather-over-tamilnadu

தென்காசி குமரி விருதுநகர் கனமழை எச்சரிக்கை

  • time: 2025-03-22

இன்றைய வானிலை நிலவரம் 

காற்று வீசும் திசையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக தமிழகம் கேரளாவில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நெல்லை தென்காசி கன்னியாகுமரி விருதுநகர் மதுரை இராமநாதபுரம் தேனி திண்டுக்கல் கோவை ஈரோடு திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். 
டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலும் இன்று ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்பு.

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

கன்னியாகுமரி தென்காசி விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இன்று நல்ல மழையை எதிர்பார்க்கலாம். 

தூத்துக்குடி மாவட்டத்திலும் இன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக கோவில்பட்டி கயத்தாறு கழுகுமலை கடம்பூர் ஆகிய இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு. திருச்செந்தூர் காயல்பட்டினம் தூத்துக்குடி ஆகிய கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இல்லை.

-Tenkasi Weatherman.

weather-over-tamilnadu

தென் தமிழகம் - தென் கேரளா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

  • time: 2025-03-21

தென்மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை 

World Forest Day March 21 

இன்று உலக காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பூமியானது 18.7 மில்லியன் ஏக்கர் காடுகளை இழந்து வருவதாக ஆய்வுகள் கூறுகிறது. காடுகள் மலைகள் இவை அனைத்தும் இறைவன் நமக்களித்த கொடையே. மாறிவரும் இயற்கை சூழலில் இயற்கையை நேசிப்பதை விட பாதுகாப்பதே முக்கியம். நாட்டின் வெப்பநிலை அதிகரிப்பு ,பெருமழை சீசன் இல்லாத காலங்களில் கொட்டி தீர்க்கும் மழை என இயற்கை எதோ ஒரு பாடத்தை நமக்கு கற்று தர முயல்கிறது. எனவே இயற்கையை பாதுகாப்பது நமது தலையாய பொறுப்பாகும். இயற்கையை அழித்து விட்டு மழையை எதிர்பார்க்க முடியாது. 

காடுகள் மலைகள் இறைவன் தந்த கலைகள்.  

இன்றைய வானிலை நிலவரம் 


மேற்கு திசை காற்று கிழக்கு திசை காற்று சந்திப்பு காரணமாக தென் தமிழகம் தென்கேரளா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

தமிழ்நாட்டை பொறுத்தவரை நெல்லை தென்காசி கன்னியாகுமரி விருதுநகர் மதுரை தேனி திண்டுக்கல் கோயம்புத்தூர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.
தேனி விருதுநகர் மேற்கு ,கொடைக்கானல் மேகமலை பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்யும். 

தூத்துக்குடி இராமநாதபுரம் மாவட்டதை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும். கோவில்பட்டி கயத்தாறு ஆகிய இடங்களிலும் இன்று மழைக்கு வாய்ப்பு.

கேரளாவை பொறுத்தவரை திருவனந்தபுரம் கொல்லம் கோட்டயம் பத்தனம்திட்டா இடுக்கி எர்ணாகுளம் ஆகிய தென் கேரளா மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை எதிர்பார்க்கலாம். 

-Tenkasi Weatherman.

weather-over-tamilnadu

திருச்செந்தூர் மழைக்கு வாய்ப்பு

  • time: 2025-03-19

தெற்கு கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு 

வலுகுறைந்த ஈரப்பதமான கிழக்கு திசை காற்று காரணமாக தெற்கு கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. 

நள்ளிரவு நாளை அதிகாலை நேரத்தில் தூத்துக்குடி காயல்பட்டினம் திருச்செந்தூர் ஆத்தூர் கல்லாமொழி குலசேகரன்பட்டினம் மணப்பாடு உவரி ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யும். 

-Tenkasi Weatherman.

weather-over-tamilnadu

தென்காசி விருதுநகர் மதுரை திண்டுக்கல் கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2025-03-16

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

காற்று முறிவு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மாலை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கன்னியாகுமாரி தென்காசி தேனி விருதுநகர் மதுரை திண்டுக்கல் கோயம்புத்தூர் திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு. 

கடையநல்லூர் புளியங்குடி வாசுதேவநல்லூர் ஸ்ரீவில்லிபுத்தூர் இராஜபாளையம் பேரையூர் உசிலம்பட்டி ஆகிய இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு. 

-Tenkasi Weatherman.