thunder-strom-nowcost

தென்காசி கோயம்புத்தூர் கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2024-05-09
தென்காசியில் மழை அடுத்த சில மணி நேரங்களை பொறுத்தவரை கோயம்புத்தூர் திருப்பூர் திண்டுக்கல் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். தற்போது பொள்ளாச்சி பகுதியில் மழை பெய்து வருகிறது. வரும் மணி நேரங்களில் கோவை திருப்பூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். தெற்கே தென்காசி மாவட்டத்திலும் இன்று பெரும்பாலான இடங்களில் மழையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு. -Tenkasi Weatherman.
thunder-strom-nowcost

தென் தமிழக பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

  • time: 2024-04-29

தென் தமிழக மலைபகுதிகளில் மழை பெய்யும்.

 அம்பாசமுத்திரம்  தென்காசி செங்கோட்டை கல்குளம் விளவங்கோடு திருவட்டார் ஆகிய 6 தாலுகாவில் மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் சற்று கனமழை பெய்யும்.

மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து குதிரைவெட்டி பாபநாசம் மணிமுத்தாறு ஆகிய இடங்களிலும் நல்ல மழை பெய்யும். 

-Tenkasi Weatherman. 

thunder-strom-nowcost

தூத்துக்குடியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

  • time: 2024-04-28

தூத்துக்குடியில் மிதமான மழைக்கு வாய்ப்பு 

தூத்துக்குடி மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். 

இன்று மாலை இரவு நேரங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.

-Tenkasi Weatherman. 

thunder-strom-nowcost

தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

  • time: 2024-04-19

நெல்லை தென்காசி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

அடுத்த சில மணி நேரங்களை பொறுத்தவரை நெல்லை தென்காசி கன்னியாகுமரி ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களை பொறுத்தவரை சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யும். இது கோடைமழை என்பதால்  பல இடங்களில் மழை பெய்வது போல கண்ணாமூச்சி காட்டி விட்டு மழை ஒதுக்கவும் செய்யும்.  

ஆனால் மழை பெய்யும் இடங்களில் சூறைக்காற்றுடன் இடி மின்னலுடன் மழை வலுத்து பெய்யும்.

-Tenkasi Weatherman. 

thunder-strom-nowcost

சங்கரன்கோவில் கனமழை எச்சரிக்கை

  • time: 2024-04-11

(Posted on 11-04-2024 இரவு 7.45 மணி )சங்கரன்கோவில் கனமழைக்கு வாய்ப்பு தற்போது தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வரும் சில மணி நேரங்களில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக சங்கரன்கோவில் திருவேங்கடம் குருவிகுளம் புளியங்குடி சிவகிரி வாசுதேவநல்லூர் ஸ்ரீவில்லிபுத்தூர் இராஜபாளையம் ஆய்க்குடி வடகரை மேக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நல்ல மழை பெய்யும். -Tenkasi Weatherman.

thunder-strom-nowcost

மேக்கரையில் கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2024-04-08

தற்போது தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வலுவான மேகங்கள் உருவாகிறது. அடுத்த சில மணி நேரங்களில் புளியரை கட்டளைக்குடியிருப்பு ஆரியங்காவு கண்ணுப்புள்ளி மெட்டு தெற்கு மேடு பூலான்குடியிருப்பு வடகரை மேக்கரை தேன்பொத்தை பண்பொழி அச்சன்கோவில் கோட்டை வாசல் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்யும். 

கடையநல்லூர் புளியங்குடி ஆய்க்குடி பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும்.

மழையின் போது தரைக்காற்று பலமாக வீசும். இடி மின்னலும் வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-Tenkasi Weatherman.