regional-wise

கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2024-04-05

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் பரவலாக மழை பெய்யும். மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு .

பேச்சிப்பாறை பெருஞ்சாணி சிற்றாறு 1,சிற்றாறு 2, கோதையாறு களியல் திற்பரப்பு களியக்காவிளை இரணியல் ஆகிய இடங்களிலும் இன்று நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.  

-Tenkasi Weatherman. 

regional-wise

தக்கலையில் கனமழை

  • time: 2024-04-04

(Posted on 04-04-2024 மாலை 2.15 மணி தற்போது )கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது. 

regional-wise

தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

  • time: 2024-04-04

தென் மாவட்டங்களில் மிதமான மழை

இன்று குமரி நெல்லை தென்காசி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. இன்று இரவு தென்காசி மாவட்டத்தின் மலையோர பகுதிகளான வடகரை மேக்கரை பண்பொழி செங்கோட்டை புளியரை கட்டளைகுடியிருப்பு குற்றாலம் ஆகிய இடங்களிலும் மழை எதிர்பார்க்கலாம்.

திருவனந்தபுரம் கொல்லம் ஆழப்புழா எர்ணாகுளம் பத்தனம்திட்டா ஆகிய தென் கேரளா மாவட்டங்களிலும் இன்று மிதமான மழை பெய்யும்.

-Tenkasi Weatherman

regional-wise

நெல்லை தென்காசி அணைகளின் நீர்மட்டம்

  • time: 2024-04-02

தென் மாவட்ட  அணைகளின் நீர்மட்டம் (02-04-2024)

நெல்லை மாவட்டம் : நம் நெல்லை நம் பெருமை 

பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 64.30
அடி
நீர் வரத்து : 63.6 கன அடி 
வெளியேற்றம் : 304.75
கன அடி

சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி 
நீர் இருப்பு : 92.44 அடி 
நீர்வரத்து :  NIL
வெளியேற்றம் :  NIL

மணிமுத்தாறு :
 உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 92.44 அடி 
நீர் வரத்து : 124 கனஅடி 
வெளியேற்றம் : 200 கன அடி
 
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50
அடி
நீர் இருப்பு: 11.50
அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: 100 கன அடி

நம்பியாறு: 
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.92 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி 
நீர் இருப்பு: 13.5 அடி
நீர்வரத்து:  Nil
வெளியேற்றம்: 2 அடி


தென்காசி மாவட்டம் 


கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 34.70
அடி
நீர் வரத்து : 3 கன அடி
கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி                    

ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி 
நீர் இருப்பு : 50.87 அடி
நீர்வரத்து : 1 கன அடி
வெளியேற்றம் : 10  கன அடி

கருப்பா நதி : 
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 46.51அடி 
நீர் வரத்து : 3 கன அடி
வெளியேற்றம் : 5 கன அடி

குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 16.25 அடி 
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: 1கன அடி

அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132 அடி
நீர் இருப்பு: 71.00 அடி
நீர் வரத்து : 1 கன அடி
நீர் வெளியேற்றம்: 7 கன அடி

regional-wise

விவசாயிகளுக்கான வானிலை அறிவிப்பு

  • time: 2024-03-17

காற்று வீசும் திசையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக காற்று முறிவு ஏற்பட்டு மார்ச் 21,22 ஆகிய நாட்களில் தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவும். 

தென்காசி கடையநல்லூர் பண்பொழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நெல் அறுவடைப்பணிகள் நடந்து வருகிறது. இந்த அறுவடைப்பணிகளை துரிதப்படுத்தவும். இதுவரை அறுவடை செய்யாமல் இருக்கும் விவசாயிகள் நாளையே அறுவடைப்பணிகளை தொடங்கி வரும் புதன் கிழமைக்குள் அறுவடைப்பணிகளை முடிக்கவும். 

இது கோடைகால மழை என்பதால் பகல் நேரங்களில் தெளிவான வானத்துடன் அதிக வெயிலும் மாலை இரவு நேரங்களில் மட்டுமே மழை பெய்யும். தொடர்மழையோ மிக கனமழையோ பெய்யாது.  இந்த மழை 15 முதல் 30 நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும். 

மழையின் போது தரைக்காற்று பலமாக வீசும். தரைப்பகுதியை தாக்கும் அளவிற்கு இடி மின்னலும் வலுவாக இருக்கும் என்பதால் மழை நேரங்களில் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டாம். 

எந்தெந்த பகுதிகளில் மழை ?

மார்ச் 21,22 ஆகிய தேதிகளில் தெற்கு கேரளா மற்றும் தென் தமிழக மலை மாவட்டங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது . குறிப்பாக குமரி தென்காசி மாவட்டங்களில் மழை பெய்யும்.

-Tenkasi Weatherman.

regional-wise

தென் கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

  • time: 2024-03-16

தென் தமிழக கடலோர பகுதிகளில் நாளை மழைக்கு வாய்ப்பு.

இராமநாதபுரம் இராமேஷ்வரம் பாம்பன் தங்கச்சி மடம் வேம்பார் வைப்பார் தூத்துக்குடி காயல்பட்டினம் திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் உவரி ஆகிய கடலோர பகுதிகளில் நாளை காலையில்  வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.