heavy-rainfall-alert

கன்னியாகுமரி நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2025-05-02

கன்னியாகுமரி நீலகிரி கனமழைக்கு வாய்ப்பு 

காற்று முறிவு காரணமாக இன்று கன்னியாகுமரி நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வால்பாறை பொள்ளாச்சி கிணத்துகடவு சின்னகல்லாறு சோலையாறு  ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யும். குமுளி தேக்கடி மாஞ்சோலையில் மிதமான மழை பெய்யும்.

தூத்துக்குடி நெல்லை தென்காசி விருதுநகர் மதுரை ஆகிய தென்  மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு 

கேரளா மாநிலத்தை பொறுத்தவரை இன்று மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். கனமழையை பொறுத்தவரை எர்ணாகுளம் திரிசூர் கோழிக்கோடு கண்ணூர் காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

-Tenkasi Weatherman.

heavy-rainfall-alert

நெல்லை தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

  • time: 2025-04-26

தென் மாவட்டங்களுக்கு  கனமழை எச்சரிக்கை 

தூத்துக்குடி மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இந்த புதிய காற்று சுழற்சி காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தென் மாவட்டங்களுக்கு தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி இராமநாதபுரம் மதுரை விருதுநகர் தேனி சிவகங்கை ஆகிய தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் ஓரிரு இடங்களில் கனமழை எதிர்பார்க்கலாம். 
மேலும் டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு.

மிக கனமழையை பொறுத்தவரை கன்னியாகுமரி நெல்லை தென்காசி விருதுநகர் மேற்கு ஆகிய 4 மாவட்டங்களில் பரவலாக இன்று மழை பெய்யும். சில இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக அம்பாசமுத்திரம் மாஞ்சோலை கோதையாறு சிவகிரி புளியங்குடி இராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு களக்காடு நாங்குநேரி ஆகிய இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்புள்ளது. 

தென் மாவட்டங்களில் மழையின் போது தரைக்காற்று பலமாக வீசும். இடி மின்னலும் வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

-Tenkasi Weatherman.

heavy-rainfall-alert

தென் மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2025-04-06

கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு .

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் மழை தொடரும் என எதிர்பாக்கப்படுகிறது.

இன்று பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்த நிலையில் கன்னியாகுமரி நெல்லை தென்காசி தேனி தூத்துக்குடி இராமநாதபுரம் விருதுநகர் மதுரை சிவகங்கை திண்டுக்கல் கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு சேலம் நாமக்கல் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று பரவலான மழை பெய்யும். 

நாளை முதல் தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும். அதே வேளையில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கன்னியாகுமரி நெல்லை  தென்காசி கோவை நீலகிரி மாவட்ட மலையோர கிராங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும். வங்க கடல் காற்று சுழற்சி உருவாகியுள்ளதால் மேற்கு திசை காற்று தற்காலிகமாக வீச துவங்கும். 

வெப்பம் அதிகரித்தால் மழை பொழியுமா? 

வெப்பம் அதிகரித்தாலே மழை பொழியும் என்று நாம் நினைக்க கூடாது
வானிலையை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட நிகழ்வை வைத்து கணித்து விட முடியாது. சுற்றுசூழல் மாற்றங்கள், பருவநிலை மாற்றம், இவற்றின் தொடர்ச்சியாக வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றம் என பல்வேறு காரணிகளை பொறுத்துதான் வானிலையின் இறுதி முடிவு கிடைக்கும்.”

-Tenkasi Weatherman

heavy-rainfall-alert

கொங்கு மற்றும் தென் மாவட்டங்களை புரட்டி எடுத்த மழை

  • time: 2025-04-05

கொங்கு மற்றும் தென் மாவட்டங்களை புரட்டி எடுத்த மழை 

தமிழ்நாட்டில் நேற்று தென் மாவட்டங்கள் மற்றும் கொங்குமாவட்டங்களில் கடுமையான மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டிலேயே மிக அதிகமான மழை ஈரோடு மாவட்டம் சிறுவலார் பகுதியில் 230 மிமீ மழை பதிவாகியுள்ளது. 
மேலும் கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில்  27 இடங்களில் கனமழையும் 7 இடங்களில் மிக கனமழையும் பதிவாகியுள்ளது. 

கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) -195 மிமீ
கோபிசெட்டிப்பாளையம் (ஈரோடு) -155 மிமீ
திருப்பூர் -150 மிமீ
அடையாமடை (கன்னியாகுமரி) -128 மிமீ
பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) -125 மிமீ

தமிழ்நாட்டில் இன்றைய வானிலை நிலவரம் 

தமிழகத்தில் இன்றும் கொங்கு மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகும். குறிப்பாக கன்னியாகுமரி நெல்லை தென்காசி தேனி திண்டுக்கல் கோயம்புத்தூர் ஈரோடு திருப்பூர் நீலகிரி சேலம் கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகும். 

விருதுநகர் மதுரை இராமநாதபுரம் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. 

கேரளாவை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் இன்று நல்ல மழை பெய்யும். திருவனந்தபுரம் கொல்லம் பத்தனம்திட்டா கோட்டயம் ஆழப்புழா திரிச்சூர் எர்ணாகுளம் இடுக்கி கோழிக்கோடு பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.இன்று மாலை இரவு நேரங்களில் கேரளா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும் 

-Tenkasi Weatherman

heavy-rainfall-alert

கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை

  • time: 2025-04-02

கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை 

காற்று சந்திப்பு, காற்று முறிவு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல்லை தென்காசி கன்னியாகுமரி இராமநாதபுரம் விருதுநகர் மதுரை சிவகங்கை புதுக்கோட்டை திண்டுக்கல் தேனி கோயம்புத்தூர் ஈரோடு திருப்பூர் சேலம் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.


தஞ்சை நாகை திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் இன்று மிதமான மழை பெய்யும். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கடலோர பகுதிகளை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் இன்று நல்ல மழை பெய்யும். 

இராமநாதபுரம் விருதுநகர் மதுரை தென்காசி ஈரோடு சேலம் ஆகிய மாவட்டங்கள் இன்று சிறப்பான மழையை எதிர்கொள்ளும். 

தினசரி வானிலை அறிவிப்புகளை தெரிந்து கொள்ள www.tenkasiweatherman என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

-Tenkasi Weatherman.

heavy-rainfall-alert

தென் மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை

  • time: 2025-03-10

தென் மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை

தென் கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான  காற்று சுழற்சி தற்போது தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடலை நோக்கி நகர்வதால் இன்று நள்ளிரவு நாளை அதிகாலை  முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை துவங்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை குறித்து திருவள்ளுவர் :

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

விளக்கம் : பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.

நாளை முதல் தமிழ்நாட்டின் வெப்பநிலை படிப்படியாக குறைந்து மழை அதிகரிக்கும். குறிப்பாக நாளை   தூத்துக்குடி நெல்லை தென்காசி இராமநாதபுரம் கன்னியாகுமரி விருதுநகர்  தஞ்சை நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை  ஆகிய 10 மாவட்டங்களில்  இடி மின்னலுடன்  கனமழை பெய்யும். மேலும் மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை கோவை ஈரோடு திருப்பூர் நீலகிரி ஆகிய உள் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும். தமிழகத்தின் பிற உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்பு.

தென் மாவட்டங்களுக்கு சிறப்பு எச்சரிக்கை

தென் தமிழக கடல் பகுதியை ஒட்டிய மன்னார் வளைகுடா கடல் மேற்பரப்பு வெப்பநிலை 29°© ஆக உள்ளது. எனவே மன்னார் வளைகுடாவில் தொடர்ந்து மழை மேகங்கள் உருவாகும். இன்று நள்ளிரவு நாளை அதிகாலை முதல் தென் மாவட்டங்களில் மழை பெய்யும். குறிப்பாக நாளை இரவு நேரத்தில் பெய்யும் மழையானது உச்சகட்ட தீவிரமடையும். தொடர்ந்து 12 மணி நேரம் வரை இடைவிடாமல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது .

இதன் காரணமாக தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் பல்வேறு  இடங்களில் கனமழை பெய்யும். நாங்குநேரி ராதாபுரம் சாத்தான்குளம் திசையன்விளை ஏரல் ஸ்ரீவைகுண்டம் நெல்லை சேரன்மகாதேவி கயத்தாறு கோவில்பட்டி விளாத்திகுளம் எட்டயபுரம் சிவகிரி சங்கரன்கோவில் ஆலங்குளம் விகேபுரம் தென்காசி திருவேங்கடம் கடையநல்லூர் இராமநாதபுரம் இராமேஷ்வரம் உள்ளிட்ட அனைத்து தாலுகாவிலும் கனமழை மிக கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளது. குமரி மாவட்டத்திலும் பெரும்பாலான இடங்களில் கனமழையும் சில இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

மேலும் தூத்துக்குடி திருச்செந்தூர் அம்பாசமுத்திரம் செங்கோட்டை ஆகிய 4 தாலுகாவில் அதீத கனமழைக்கு வாய்ப்பு.

குற்றால அருவிகள் களைகட்டும். பாபநாசம் மணிமுத்தாறு உட்பட தென் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும்.
 

மார்ச் மாத மழை குறித்த சுவாரஸ்ய வரலாறு:

கடந்த 132 ஆண்டுகால வானிலை வரலாற்றில் மார்ச் மாதத்தில் 5 புயல்களும் 2 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் வங்க கடலில் உருவாகி உள்ளது. 1938 ஆம் ஆண்டு உருவான  காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையும், 1994 ம் ஆண்டு உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அந்தமானையும் நெருங்கியது ஆனால் தமிழகத்திற்கு வரவில்லை. அதன் பின்னர்  2022 ம் ஆண்டு ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.2022 ம் ஆண்டு உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை பொறுத்தவரை  கடந்த 132 ஆண்டுகளில்  வானிலை வரலாற்றின் அடிப்படையில் தமிழகத்தை நெருங்கிய முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இதுவே ஆகும்.

குமரி மாலத்தீவு காற்றழுத்தம்
இதற்கிடையே 2018 ல் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது இந்த காற்றழுத்தம் காரணமாக 2018 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தூத்துக்குடி வரலாறு காணாத மழையை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மார்ச் மாத மழை பொழிவு

தமிழ்நாட்டில் மார்ச் மாதத்தில் மாநிலத்திலேயே அதிகமழை பெய்யும் மாவட்டம் தென்காசி. காற்று முறிவு காரணமாக இம்மாவட்டம் அதிகமழையை பெறும். இதுவரை கடந்த 87 ஆண்டு கால வானிலை வரலாற்றில் தமிழகத்தில் 2008 ம் ஆண்டு பதிவான மழை மிக மிக  அதிகம்.2008 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழகம் சராசரியாக 167 மிமீ மழையை பெற்றிருக்கிறது.

தென் மாவட்ட மக்களே கோடையிலும் ஒரு மழை காலத்தை ஏற்று கொள்வோம்.
குடை கொண்டு உன்னை
தடுக்க விரும்பாமல் கை
விரித்து தலை உயர்த்தி
உன்னை ரசிக்கிறேன் மழையே உனக்காக காத்திருக்கிறேன்.

-Tenkasi Weatherman.