உலகக் காட்டுயிர் நாள் ( World Wildlife Day ) அருகிவரும் காட்டு விலங்குகள் மற்றும், தாவரங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாக, ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3 இல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
பருவ நிலை மாற்றம், காடுகளை அழித்தல் போன்ற காரணங்களால் பல உயிரினங்கள் அருகிவரும் இனமாகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு அமைப்பால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியவில் மட்டுமே வாழ்ந்துவந்த இந்தியசிவிங்கிப்புலி இனம் மன்னர்கள் காலத்திலேயே கிட்டத்தட்ட அழிக்கப்பட்டு இப்போது முற்றாக இல்லை. எனவே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் மொத்தம் 53 புலிகள் காப்பகங்கள் உள்ளது. இதன்மூலம், புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது அதாவது 2006 -ல் 1411 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018-ல் 2967 ஆக உயர்ந்துள்ளது. புலிகள் வளமான காட்டின் அடையாளம் ஆகும். காட்டில் வாழும் புலிகள் உள்ளிட்ட வன உயிர்கள் மற்றும் புற்கள் உள்ளிட்ட வன தாவரங்கள் இயற்கைச் சமநிலையோடு இருந்தால்தான் காடுகள் வளமாக இருக்கும். இயற்கை ஒவ்வோர் இனத் தாவரங்களின் எண்ணிக்கையும், விலங்குகளின் எண்ணிக்கையும் ஒரே சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது.இவற்றில் ஒன்று அதிகரித்து குறைந்தாலும் மற்றொன்று பாதிக்கப்படும்
ஊன் உண்ணிகளே இல்லாத காட்டில் மான் இனங்கள் இருப்பின் அவைகள் பெருகி, புற்களையெல்லாம் மேய்ந்து தீர்த்துவிடும். புற்கள் பற்றாக்குறை ஏற்படின், அவைகள் விளைநிலங்களிலுள்ள பயிர்களை அழிக்கும். ஆனால் ஊன் உண்ணிகள் இருப்பின் மான்களைப் பிடித்துத் தின்று அவற்றின் அளவைக் கட்டுப்படுத்திவிடும். இதுவே இயற்கையின் சமநிலை
இந்நிலை (Balance of Nature) என்கிறோம். எனவே அனைத்து உயிரினங்களையுமே நாம் பாதுகாக்க வேண்டும்.
இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல என்பதை மனிதன் எப்போது புரிந்து கொள்கிறானோ அன்று தான் இந்த பூமியை எல்லா உயிர்களுக்குமானதாக மாற்ற முடியும்.
Tenkasi Weatherman