தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை வரலாற்றில் இன்று (14-03-2018)
மார்ச் 14,2018 அன்று தென் மாவட்டங்களில் பதிவான மழை குறித்து இந்த பதிவில் காணலாம். குமரி கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மார்ச் மாதத்தில் தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக தூத்துக்குடி மாநகரில் 63 ஆண்டுகளுக்கு பிறகு 200 மிமீ மழை பதிவானது. தூத்துக்குடியில் அன்றைய நாளில் இந்தியாவில் பதிவான முதல் 200 மிமீ மழை இதுவே ஆகும்.
மார்ச் மாதத்தில் தூத்துக்குடியில் ஏன் மழை?
குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மார்ச் 13,2018 இரவு முதல் தென் கடலோர மாவட்டங்களில் மழை துவங்கியது. தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. குறுகிய நேரத்தில் அதாவது சில மணி நேரங்களிலே தூத்துக்குடி மாநகரில் 200 மிமீ மழை பதிவானதால் தூத்துக்குடி மாநகரமே மழையால் ஸ்தம்பித்தது. அன்றைய தினம் மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி -200 மிமீ
அப்பர் பாபநாசம் -190 மிமீ
லோயர் பாபநாசம் -146 மிமீ
காயல்பட்டினம் -142 மிமீ
ராமநதி தென்காசி -130 மிமீ
கடனா தென்காசி -110 மிமீ
சேர்வலாறு -102 மிமீ
செங்கோட்டை -101 மிமீ
குண்டாறு -100 மிமீ
ஸ்ரீவைகுண்டம் -95 மிமீ
தென்காசி -86 மிமீ
திருச்செந்தூர் -82 மிமீ
-Tenkasi Weatherman.