இன்று உலக காடுகள் தினம் : பூமியை பல வகையில் பாதுகாத்து வரும் பசுமை போர்வையாம் காடுகள் பற்றியும் அதன் வளம் காப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஓர் தினமாக இந்நாள் உலக அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது.
காடு என்பது பல்வேறு உயிரினங்கள் ஒன்றிணைந்து அமையப்பெற்ற ஓர் சுழல் மண்டலமாகும். பல அரிய வகை மரங்களையும், விலங்குகளையும் கொண்ட இயற்கை வரம் தான் காடுகள் . பூமியின் மொத்த பரப்பளவில் 30 சதவீதம் காடுகளே உள்ளன.
பருவநிலை மாற்றம், காடுகள் அழிப்பு என இன்றைய காலகட்ட பிரச்னைகளால் இந்த நாளை நாம் புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. விலை மதிக்க முடியாத காடுகள் அழிக்கப்பட்டால் பல்லுயிர்த்தன்மை அழியும். பல்லுயிர்த்தன்மை அழிந்தால் மனித இனம் எங்கே போகும்?
காடுகள் அழிவதில்லை. அழிக்கப்படுகின்றன. எங்கெல்லாம் காடுகளுக்கு எதிராக மனிதர்கள் செயல்படுகிறார்களோ அங்கெல்லாம் நமது குறைந்தபட்ச எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.உலக காடுகள் தினமான இன்று நாட்டின் வளம் காக்க காட்டின் வளம் காப்போம் என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொள்வோம்.
-Tenkasi Weatherman