Back
artical-details

விடைபெற்றது வடகிழக்கு பருவமழை

  • date : 2025-01-27
  • Category : Environmental Awareness

விடைபெற்றது வடகிழக்கு பருவமழை 

தமிழகத்திற்கு பெருமழையை அளிக்கும் வடகிழக்கு பருவமழை இன்று விலகியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் காணலாம். 

வரலாற்றில் பதிவான வடகிழக்கு பருவமழை :
தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலக்கட்டமே வடகிழக்கு பருவமழை காலமாகும் இந்த காலகட்டத்தில் தமிழகம் மட்டுமே அதிகமழை பெறும். வடகிழக்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு 105 நாட்கள் நீடித்துள்ளது. 

மிக வேகமாக விலகிய ஆண்டும் / தாமதமாக விலகிய ஆண்டும் : 
வரலாற்றில் வடகிழக்கு பருவமழை மிக விரைவாக விலகிய ஆண்டு 1994. 1994 ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை மிக விரைவாக டிசம்பர் 14 ம்தேதியே தமிழ்நாட்டில் விலகியுள்ளது. அதே போல வரலாற்றில் வடகிழக்கு பருவமழை மிக தாமதமாக விலகிய ஆண்டு 1933. 1933 ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் துவங்கிய பருவமழை 1934 ம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ம்தேதியே விலகியுள்ளது. 

வரலாற்றில் குறைவாக மழை பெய்த நாட்கள் அதிகமழை பெய்த நாட்கள் :
1992 ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை வரலாற்றிலேயே மிக குறைவாக 51 நாட்கள் மட்டுமே மழை நீடித்துள்ளது. 1992 ம் ஆண்டில்  குறைவான நாட்கள் மழை பெய்தாலும் அந்த ஆண்டில்  நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தென் மாவட்டங்கள் உருக்குலைந்தது. 14-11-1992 ல் நெல்லை மாவட்டம் காக்காச்சியில் ஒரே நாளில் 965 மிமீ மழை பெய்து தமிழகத்தை அதிரவைத்து விட்டது.

வரலாற்றில் இதற்கு முன்பு 2005 ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையானது 98 நாட்கள் நீடித்துள்ளது. இதுவே அதிகப்பட்ச மழை நாளாக இருந்த நிலையில்  தற்போது இந்தாண்டு வடகிழக்கு பருவமழையானது இதுவரை இல்லாத அளவுக்கு 105 நாட்கள் நீடித்துள்ளது.  

தாமதமாக விலகிய பருவமழை 

1933 ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் துவங்கிய பருவமழை 1934 ம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ம்தேதியே விலகியுள்ளது. 1933 ம் ஆண்டுக்கு பிறகு அதாவது 100 ஆண்டுகளுக்கு பிறகு வடகிழக்கு பருவமழையானது   மிக தாமதமாக இந்தாண்டு ஜனவரி 27 ம்தேதி விலகியுள்ளது.   

வரலாற்றில் பதிவான கிருஷ்ணகிரி தென்காசி மாவட்டங்கள் : 

வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த மாதம் டிசம்பர் 2 ம்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் ஒரேநாளில்  503 மிமீ மழை பதிவானது. அதே போல டிசம்பர் 13 ம் தேதி நெல்லை மாவட்டம் ஊத்து ஒரேநாளில் 540 மிமீ மழை பதிவானது அம்பாசமுத்திரம் பகுதியில் 366 மிமீ மழையும் அதே நாளில் தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் 312 மிமீ மழையும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி 365 மிமீ மழை பதிவானது. 

நாட்டிலேயே அதிகமழை பெற்ற மாஞ்சோலை 
கடந்த அக்டோபர் முதல் இன்று வரையிலான காலத்தில் நெல்லை மாவட்டம் ஊத்து 3436 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது நாட்டிலேயே அதிகப்பட்ச மழையாகும்.

 

கோடைகாலம் தென்மேற்கு பருவமழை உள்ளிட்ட  எத்தனையோ பருவமழை காலத்தில் தமிழகம்  மழைபெற்றாலும் வடகிழக்கு பருவமழைக்கு ஈடாகாது. தமிழகம் ஆண்டு மழைப்பொழிவில் அதிகமழையை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான்  பெறுகிறது.

எனவே பருவமழை என்பது நமக்கு மிக முக்கியம்.வடகிழக்கு பருவமழையே நீ என்னை விட்டு தற்காலிகமாக விலகினாலும் நீ மீண்டும் வருவாய் என்ற நம்பிக்கையுடன் 

-Tenkasi Weatherman.

Write Reviews

0 reviews