மினி ஊட்டியாக மாறிய கோவில்பட்டி
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகான நகரம் கோவில்பட்டி. மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாக கோவில்பட்டி உள்ளது. கோவில்பட்டி ஒரு வறண்ட பகுதி தான் ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இங்கு மழைப்பொழிவு அதிகரித்து வருகிறது. இதை நாம் கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜனவரி பிப்ரவரி மாதமான குளிர்காலத்திலும் கோவில்பட்டியின் குறைந்த பட்ச வெப்பநிலை 15°© வரை குறைகிறது.
கோடைகாலத்தில் அதிகவெப்பநிலையும் மழைகாலத்தில் அதிகமழையும் குளிர்காலத்தில் அதிகபனிப்பொழிவும் என வெவ்வேறான காலநிலை நிலவுகிறது.
கோவில்பட்டியின் கடந்த கால வானிலையும் தற்போதைய வானிலை அமைப்பும்:
தமிழ்நாட்டில் பழமையான மழைமானி நிறுவப்பட்ட இடங்களில் கோவில்பட்டியும் ஒன்று .இங்கு 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மழை அளவுகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்திய வானிலை ஆய்வு மைய கட்டுப்பாட்டில் இங்கு தானியங்கி வானிலை நிலையம் செயல்படுகிறது. இதன் மூலம் தினசரி கோவில்பட்டியின் வெப்பநிலை மழை அளவு காற்றின் வேகம் காற்று வீசும் திசை ஈரப்பதம் உள்ளிட்ட அனைத்து வானிலை சார்ந்த தகவல்களையும் நாம் தெரிந்து கொள்ள முடியும்.
கோவில்பட்டியை பொறுத்தவரை மிதமான மழை பெய்யும் பகுதி. இங்கு மிக கனமழை பெய்வது அரிதாகவே இருந்துள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே மழை அளவு அதிகரித்து வருகிறது.
நவம்பர் 10,1907 ஆம் ஆண்டு கோவில்பட்டி நகரில் 153 மிமீ மழை பதிவானது. இதுவே அதிகப்பட்சமழையாகும். 1901 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் கோவில்பட்டி ஒரு முறை கூட அதிகனமழை பெய்த வரலாறே இல்லை. இங்கு 1907 ம் ஆண்டுக்கு பிறகு 150 மிமீ மழை கூட பதிவானதே இல்லை.
ஆனால் தற்போது வெப்பநிலை மற்றும் மழை அளவு அதிகரித்திருக்கிறது. குறிப்பாக மே ஜூன் மாதங்களில் கோவில்பட்டியில் பெரும்பாலும் 100°F க்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக கோடைகாலத்திலும் கோவில்பட்டியில் மழை அதிகரித்துள்ளது. குறிப்பாக மே ,ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் அதிகமழை பொழிகிறது.
தென்மேற்கு பருவமழை காலத்தில் பொதுவாக தூத்துக்குடி மாவட்டம் மழை பெறாது ஆனால் தென்மேற்கு பருவமழை வலுகுறைந்த நாட்களில் கோவில்பட்டி தொடர்ச்சியாக மழை பெற்று வருகிறது. அக்டோபர் மாதம் நல்ல மழையை பெறுகிறது.
மழை அதிகரிப்பு : நவம்பர் 11,1907 ம் ஆண்டு கோவில்பட்டியில் 153 மிமீ மழை பதிவான நிலையில் 116 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 18,2023 ம் ஆண்டு கோவில்பட்டியில் 525 மிமீ மழை பதிவானது. இது வரலாறு காணாத மழையாகும். அதன்பின்னர் டிசம்பர் 13,2024 ல் இங்கு 365 மிமீ பெருமழை பதிவானது. இவ்வாறு தொடர்ச்சியாக கடந்த 2 ஆண்டுகளாக பெருமழை பதிவாகியுள்ளது.
ஆண்டு மழைப்பொழிவை எடுத்து கொண்டால் கடந்த 4 ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் 1000 மிமீக்கு மேல் மழையை பெற்றுள்ளது.
2021 -1000 மிமீ, 2021 -846 மிமீ, 2023- 1378 மிமீ, 2024-1107 மிமீ
Note : கோவில்பட்டியில் வடகிழக்கு பருவமழையை விட தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் நல்ல மழையை பெறுகிறது ஏனெனில் இங்கு பகலில் கடுமையான வெப்பநிலை பதிவானாலும் மாலை இரவு நேரங்களில் வெப்பசலன மழை அதிகம் பதிவாகிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக இடி மின்னலும் அதிகரித்துள்ளது.
அதிகரிக்கும் பனிப்பொழிவு : கடந்த சில ஆண்டுகளாக கோவில்பட்டியில் குளிரின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. 2024 ம் ஆண்டு ஜனவரியில் இங்கு குறைந்தபட்ச வெப்பநிலை 16°C ஒட்டியே பதிவானது. அதே போல 2025 ம் ஆண்டிலும் வெப்பநிலை அதிரடியாக குறைந்திருக்கிறது. மலைப்பகுதிக்கு நிகராக இங்கு குளிர் நிலவுகிறது.
புகழ்பெற்ற குற்றாலம் தென்காசியை விட இங்கு குளிர் அதிகமாக உள்ளது. தென் கோடி மாவட்டங்களில் மிகவும் குளிரான பகுதியாக கோவில்பட்டி இருக்கிறது என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை.1901 முதல் 2000 வரையிலான 100 ஆண்டுகளில் இருந்த காலநிலையை விட தற்போதைய கோவில்பட்டியின் காலநிலை மாறியுள்ளது.
-Tenkasi Weatherman.
Useful update for kovilpatti people's
துல்லியமாக கணக்கிட்டு சொல்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி
Jill Jill kovilpatti
we can see lot of tree plantation and maintenance drive happening in and around kovilpatti over the last 2 decades ..good to hear the favourable weather conditions in kovilpatti this is a great article