Back
Fisher men warning

தென் கடலோர பகுதிகளில் கடல் அலைகள் எழும் கள்ளகடல் எச்சரிக்கை

  • time : 2024-05-04

தென் கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்பு 


தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி ஆகிய தென் கடலோர மாவட்டங்களின் கடலோர பகுதியில் கடல் அலைகள் தாக்க வாய்ப்புள்ளது. 

கள்ளகடல் எச்சரிக்கை 
இந்திய பெருங்கடலில் தென் பகுதிகளில் வீசும் பலத்த காற்று காரணமாக கடலில் திடீரென சீற்றம் காணப்படும். எந்த வித அறிகுறிகளும், எச்சரிக்கையும் இன்றி திடீரென கடல் சீற்றம் ஏற்படும்" பொதுவாக கடல் சீற்றம் என்பது புயலோ, காற்றழுத்த தாழ்வு நிலையோ, கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தின் போதும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இது போன்ற எந்த நிகழ்வுகளும் இல்லாமல் கடல் சீற்றம் என்பது கள்ளக்கடல் என அழைக்கப்படுகிறது


2012 ஆம் ஆண்டில், "கள்ளக்கடல்" என்ற சொல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு  முறையான ஒப்புதலைப் பெற்றது.கள்ளக்கடல் நிகழ்வுகளின் போது, கடல் அலைகள் கடற்கரை பகுதிக்குள் நுழைந்து  அப்பகுதியை  மூழ்கடிக்கிறது. இந்த நிகழ்வுகள் . குறிப்பாக 2004 இந்தியப் பெருங்கடல் சுனாமிக்குப் பிறகு, பலர் கள்ளக்கடல் நிகழ்வை சுனாமி என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள்
சுனாமி மற்றும் கள்ளக்கடல் அலைகள் முற்றிலும் மாறுபட்டவை .

தூத்துக்குடி நெல்லை குமரி ஆகிய தென்கடலோர கடற்கரைக்கு மக்கள் செல்ல வேண்டாம்: கடல் சீற்றத்தில் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளாமல் இருக்க உரிய இடைவெளியுடன் படகுகளை நிறுத்தி வைக்க வேண்டும். வலைகள் உள்பட மீன்பிடி கருவிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். கடற்கரைகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்கவும். 

 

தென் தமிழக மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் : 

இன்றும் நாளையும் தென் தமிழக மக்கள் கடற்கரை பகுதிக்கோ மீன்பிடிக்கவோ செல்ல வேண்டாம். கடல் கொந்தளிப்பு காரணமாக தாழ்வான பகுதிக்குள் கடல் அலைகள் தாக்க வாய்ப்புள்ளதால் இதை சுனாமி என்று நினைக்க வேண்டாம். தென் கடலோர பகுதிகளில் அதிகப்பட்சமாக 1.8 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் எழ வாய்ப்புள்ளது. 

-Tenkasi Weatherman. 

Write Reviews

0 reviews