தமிழ்நாட்டில் வெயில் அதிகரிப்பு
தமிழ்நாட்டில் இன்று மிக அதிகமான வெப்பநிலை விருதுநகர் கரூர் மாவட்டங்களில் 111°F வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஈரோடு 110°F, வேலூர் 108°F, திருச்சி மதுரை மாவட்டங்களில் 107°F வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. நெல்லையில் முதல் முறையாக இன்று 106°F வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் இன்று வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியுள்ளது. வெப்பஅலையை பொறுத்தவரை தமிழகத்தில் இன்று விருதுநகர் கரூர் ஈரோடு வேலூர் திருச்சி மதுரை ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை வீசியுள்ளது.
கள்ளகடல் எச்சரிக்கை : தென் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிக்கும் என நேற்றே எச்சரித்திருந்தோம். நாம் தெரிவித்தது போல தூத்துக்குடி நெல்லை குமரி கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. குளச்சல் தேங்காய் பட்டணம் பகுதியில் ராட்சத அலையில் சிக்கி மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : தென் தமிழக கடலோர பகுதியில் நாளையும் கடல் சீற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயரமான கடல் அலை எழும்பும் என எதிர்பார்க்கப்படுவதால் கடலோர பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம். மீனவர்களும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
-Tenkasi Weatherman.
test