Back
hill-station-detail

Kolukkumalai Theni

  • time : 2024-02-24

கொள்ளை அழகுகளைக் கொண்ட... குளு குளு... கொழுக்குமலை.!

தேனியிலிருந்து ஏறத்தாழ 65கி.மீ தொலைவிலும், கோவையிலிருந்து ஏறத்தாழ 212கி.மீ தொலைவிலும், அமைந்துள்ள பிரம்மாண்டமான இயற்கை சுற்றுலாத்தலமாக கொழுக்குமலை திகழ்கிறது.

அழகான மலையும், சாரல் குளிர்காற்றும் நம்மை உற்சாகப்படுத்தும் உணர்வே தனி சுகம். கடல் மட்டத்தில் இருந்து 8100 அடி உயரத்தில் அமைந்த பசுமையான மலைதான் கொழுக்கு மலை. டீ' சாகுபடி மட்டுமே இந்த பகுதியில் நடக்கும் ஒரே தொழிலாகும். இங்கு இன்னமும் பழங்கால முறைப்படி செயல்படும் தேயிலை தொழிற்சாலை ஒன்றும் அமைந்திருக்கிறது. இங்குள்ள தேயிலை தொழிற்சாலையில் பாரம்பரியமான ஆங்கிலேயே முறைப்படி தயாரிக்கப்படும் நாம் குடிக்கும் தேநீரில் இருந்து வித்தியாசமான சுவையுடைய தேநீரை சுவைத்து மகிழலாம்.


சிறப்புகள் :

உலகிலேயே உயரமான இடத்தில் தேயிலை விளையும் ஒரே இடம் கொழுக்குமலை ஆகும். இந்த மலையின் சிறப்பு வருடம் முழுவதும் குளிர்வான காலநிலையை கொண்டிருக்கும். கொள்ளை அழகு கொண்ட கொழுக்குமலை தமிழகத்தில் அமைந்திருப்பது சிறப்பானதாகும். கொழுக்குமலை சுற்றுலா பயணிகளின் நுழைவுவாயிலாக சூரிய நெல்லி கிராமம் அமைந்துள்ளது. 

தேயிலை தோட்டங்கள் நிறைந்த பூப்பாறை கடந்து பெரிய கானல், சின்னக்கானல் வழியாகச் சென்றால் ரம்மியமாக பரந்து விரிந்து கிடைக்கும் டேம்தான் யானை இரங்கல் டேம். இந்த இடத்தை ஒரு நாள் முழுவதும் சுற்றிப் பார்த்து ரசித்து பரவசம் அடையலாம்.

பொதுவாக சில வகை மேகங்கள் 5000 அடி உயரத்தில் உருவாகும். ஆனால் 7000 அடி உயரத்திற்கு மேல் இருக்கிறது கொலுக்குமலை . மேகங்கள் அதிகம் சூழ்ந்திருப்பதால்  பக்கத்தில் இருப்பவர்கள் கூட தெரியாது.
இங்குள்ள மேகக் கூட்டங்கள் தேயிலை தோட்டங்களின் மலை முகட்டில் மறைந்து வெளியேறும் அனுபவத்தைப் பார்க்க முடியும். மேகக்கூட்டங்கள் மலைகளுடன் விளையாடுவது போலவும், ஆகாயங்கள் மலைகளுடன் பேசிக் கொண்டு இருக்கும் காட்சிகளைக் இங்கு கண்டுக்களிக்கலாம். இந்த காட்சிகளை காலை நேரங்களில் சூரியன் உதிக்கும் வேளையில் தாராளமாக பார்த்து ரசிக்கலாம். மலைகளும், மேகங்களும் ஆகாயம் தொட்ட அழகிய இடமாக கொழுக்குமலை திகழ்கிறது.

பிறகு கொழுக்குமலைக்கு அருகில் உள்ள மலை முகடுதான் மீசைப்புலி. கொழுக்குமலையில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் ஜீப்பில் பயணித்தால் மீசைப்புலி மலைப்பகுதியைச் சென்று அடையலாம். மீசைப்புலி மலை போடி தாலுகா கொலுக்குமலை அருகே இருந்தாலும்  கேரளா அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கே மலையேற்றமும் செய்ய முடியும். மீசைப்புலி மலையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விரிந்துள்ள பசுமை அழகைக் காண முடியும். 


கொலுக்குமலை - எப்படி அடைவது ?:
தேனி மாவட்டத்தில் கேரளா, தமிழ்நாடு மாநில எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது இந்த கொலுக்குமலை. மூணாறு வந்து அங்கிருந்து கிழக்கே 23 கி.மீ தொலைவில் உள்ள சூரிய நெல்லி என்கிற இடத்தை அடைய வேண்டும்
அதற்குமேல் காரில் பயணம் செல்வது மிகக்கடினம் என்பதால் இங்குவரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் தனியார் ஜீப் ஒன்றை வாடகைக்கு அமர்திக்கொள்கின்றனர். சூரிய நெல்லயில் இருந்து கொலுக்குமலை 10 கி.மீ தான் என்றாலும் இதனை சென்றடைய இரண்டு மணி நேரம் ஆகிறது. சுவாசப்பிரச்சனை இருப்பவர்கள், குழந்தைகள் இப்பயணத்தை தவிர்ப்பது நல்லது. 

கொலுக்குமலை - என்ன செய்யலாம் இங்கே ?

கொலுக்குமலையில் நாம் கண்டிப்பாக தவற விடக்கூடாத விஷயங்களில் முக்கியமானது இங்கு நிகழும் சூரிய உதயமாகும். அதிகாலையில் பனிவிலகாத பசுந்தேயிலைத் தோட்டத்தின் பின்னணியில் கைக்குழந்தையின் உள்ளங்கை போன்ற இளஞ்சிவப்பு நிறத்தை சூரியன் பரப்பும் காட்சி வார்த்தைகளில் அடங்காதது. 

கொலுக்குமலை - எங்கே தங்குவது ?:
கொலுக்குமலைப்பதை தனியாருக்கு சொந்தமானது என்பதால் நுழைவுக்கட்டணமாக 100 ரூபாய் செலுத்தவேண்டும். இங்கு தங்கவேண்டுமானால் கொலுக்குமலை தேயிலை உற்பத்தி ஆலையால் நடத்தப்படும் 3 படுக்கையறை வசதி கொண்ட தங்கும் விடுதி ஒன்று மட்டுமே உள்ளது. முன்னரே திட்டமிட்டு முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது.

இப்படியொரு அழகான இடத்தை புதுமையாக ரசித்திட வேண்டும் என்று நினைப்பவர்கள் இரவில் கொலுக்குமலையில் 'கேம்ப்' அமைத்து தங்கலாம். இதற்கென்றே பிரத்யேகமான இடங்களும் இங்கே உண்டு

மலையேற்றம் செல்லவும் கொலுக்குமலை நல்லதொரு இடமாகும். கொலுக்குமலையில் இருந்து மீஷபுலிமலை வரை டிரெக்கிங்கில் ஈடுபடலாம். அப்போது இந்த கொளுக்குமலையை சுற்றியிருக்கும் சோலைக் காடுகள்,ஊசியிலைக்காடுகள், பசுமையான மேய்ச்சல் நிலங்கள் போன்றவற்றை பார்க்கலாம்.

  மொத்தத்தில் வழக்கமாக செல்லும் சுற்றுலாவில் இருந்து மாறுபட்டு சில நாட்கள் இனிமையாக, இயற்கையுடன் நெருக்கமாக களித்திட விரும்புகிறவர்கள் ஒருமுறைக்கு பலமுறை செல்லவேண்டிய ஓரிடம் இந்த கொளுக்குமலையாகும்.
பிற மாநிலத்திலோ பிற நாட்டிலோ இப்படிப்பட்ட இடங்கள் இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நம்ம தென் தமிழகத்தில் சொர்க்கத்தின் உச்சிக்கே செல்லும் இடங்கள் நிறைய உள்ளது. நாம் தமிழகத்தில் வாழ பெருமைப்பட வேண்டும்

Write Reviews

0 reviews