Back
hill-station-detail

Thenmalai

  • time : 2024-02-24

செங்கோட்டை அருகே ஒரு சொர்க்க பூமி தென்மலை :

தமிழகத்தில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து 29 கிமீ தொலைவில் அமைந்துள்ளது தென்மலை. பல ஏக்கர்களில் விரிந்திருக்கும் பசுமை மாறாக்காடுகளை கொண்டிருக்கும் இந்த இயற்கை சுற்றுலா வளாகம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து வருகிறது.

செங்கோட்டை - கொல்லம் ரயில் பாதையில் உள்ள 13 கண் மதகுப் பாலத்தை,  பல படங்களில் நாம் பார்த்திருப்போம். இந்தப் பாலம் 108 ஆண்டுகள் பழைமையானது. `தளபதி' படத்தில் வரும் ரயில் காட்சிகள் இங்குதான் படமாக்கப்பட்டன. ட்ரெக்கிங், த்ரில்லிங், சாகசம், குழந்தைகள் விரும்பும் dancing நீருற்று... என, பரவசம் தரும் சுற்றுலாத்தளம் தென்மலை. 

‘சூழலியல்’ சுற்றுலாத்திட்டத்தின் அடிப்படையாக இப்பகுதி 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கலாச்சார மண்டலம், சாகசப்பொழுதுபோக்கு மண்டலம், பொழுதுபோக்கு மண்டலம், மான்கள் மறுவாழ்வு மண்டலம் மற்றும் படகுச்சவாரி மண்டலம் என்பவையே அவை.

இந்த ‘சூழலியல்’ சுற்றுலாத்திட்ட வளாகத்தில் பல அரிய வகை தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் நிரம்பியுள்ளன. மலைப்பாங்கான அமைப்பை கொண்டுள்ள இந்த சுற்றுலாத்தலத்தில் படகுச்சவாரி, கயிற்றுப்பாலம், மலையேற்றம், சிகரமேற்றம், சைக்கிள் பயணம் மற்றும் இசை நீரூற்று போன்ற ஏராளமான சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன.

இயற்கை ரசிகர்கள் விரும்பக்கூடிய சொர்க்கபூமி

தேன்மலா சுற்றுலாத்தலத்தின் ஒரு முக்கியமான சிறப்பம்சமாக கல்லடா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரு அணை அமைந்துள்ளது. மேலும் பாலருவி நீர்வீழ்ச்சி எனும் ஒரு பிக்னிக் ஸ்தலமும் இங்கு அருகிலேயே உள்ளது.

இது தேனிலவுப்பயணிகள் மத்தியில் பிரசித்தமாக உள்ளது. பலவிதமான மான் இனங்கள் வசிக்கும் மான் பூங்காவும் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு அம்சமாகும். இந்த பூங்காவில் கட்டப்பட்டிருக்கும் மரவீடுகள் ஒரு அற்புதமான சுற்றுலா அனுபவத்தை தர காத்திருக்கின்றன.

 இனிமையான மற்றும் மிதமான பருவநிலை இங்கு பயணிகளை வரவேற்கிறது. சாகசம் அல்லது பொழுதுபோக்கை விரும்பும் பயணிகளுக்கு ஒரு முழுமையான மறக்க முடியாத அனுபத்தை வழங்க இந்த தென்மலா சுற்றுலாத்தலம் காத்திருக்கிறது.வண்ணத்துப்பூச்சிப் பூங்கா, குழந்தைகளை மிகவும் கவரும். இங்கு 166 வகையான வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. எனினும்,  அதிர்ஷ்டம் இருந்தால்தான் நம்மால் அவற்றைக் காண முடியும். இந்தப் பூங்காவில் வனவிலங்குகளும் ஏராளமாக உள்ளன.

 25 சாகச விளையாட்டுகள் விளையாடி மகிழலாம். மான் பண்ணையும் கடவுள்கள் உருவத்தில் செதுக்கப்பட்ட மரங்கள் நிறைந்த காடும்கூட கண்களுக்கு விருந்தளிக்கும். தென்மலை அணையில் படகுப் பயணம் போன்றவை குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்யும். அணைக்குள் எட்டு கிலோமீட்டர் படகில் அழைத்துச் செல்கிறார்கள். அப்போது, வனவிலங்குகளை நாம் காண முடியும். மாலையில் இங்கு உள்ள dancing fountain, பாடலுக்கு ஏற்ப நடனமாடி குழந்தைகளை உற்சாகம்கொள்ளவைக்கும். தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கில இசைக்கு dancing fountain நடனமாடுகிறது. திங்கள்கிழமை ஒருநாள் மட்டும் பராமரிப்புப் பணிகளுக்காக இந்த நீரூற்றுக்கு விடுமுறை. 

தென்மலையில் சுற்றுலா செல்ல, நாள் ஒன்றுக்கு பெரியவர்களுக்கு 680 ரூபாயும், சிறியவர்களுக்கு 655 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. thenmalaecotourism.com என்ற தளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். இரவில் தங்குவதற்கு, `கேம்ப்பிங் நெஸ்ட்' என்ற ஹோட்டல் கல்லாடா ஆற்றின் அருகே உள்ளது.
First Ecotourism in india. 

தென்மலைக்கு செல்வது எப்படி: 

தமிழகத்தில் நீங்கள் எந்த மாவட்டத்தில் இருந்து வந்தாலும் தென்காசி வர வேண்டும். தென்காசியிலிருந்து செங்கோட்டை வழியாக தென்மலைக்கு செல்ல பேருந்து மற்றும் ரயில் வசதிகள் அதிகமாக உள்ளது.

Write Reviews

0 reviews