தமிழக மக்கள் அறிந்திராத ஒரு மலைகிராமம் : தமிழக கேரளா எல்லையோரம் அமைந்திருக்கும் இந்த மேக்கரை கிராமத்தில் அழகுக்கு பஞ்சமில்லை. வழியெங்கும் தென்படும் சிறு அருவிகளும், அழகிய நீரோடைகளும் நம்மை கவர்ந்து இழுக்கும்
இங்கு அடவிநயினார் அணை உள்ளது. இந்த அணை முழு கொள்ளளவான 132 அடியை எட்டியதும் உபரி நீர் மதகுகள் வழியாக கால்வாய்களில் வெளியேற்றப்படும். அந்த அழகை காண்பதற்காக பல ஆயிரங்கணக்கான மக்கள் இங்கு வருகை தருவார்கள்.
இந்த மேக்கரை கிராமம் தென்காசியில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது.
sdfwer63463