மனிதர்களின் காலடி தடம் படாத வாகமண். இயற்கை காதலர்களின் சொர்க்கம்.
பசுமையான மேற்கு தொடர்ச்சி மலைகள் ஆறுகள் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகள், அடர்ந்த பைன் காடுகள் என இயற்கையின் அழகில் உள்ள வாகமண் மிக சிறந்த மலைப்பிரதேசம் ஆகும். கேரளாவின் இடுக்கி - கோட்டயம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இந்த வாகமண் ஆசியாவின் ஸ்காட்லாந்து என புகழப்படுகிறது.
வாகமண் மலைப்பகுதியை பொறுத்தவரை வாகமன் பைன் காடு ,மர்மலா நீர்வீழ்ச்சி ,தங்கல் பாரா,தரிசு மலைகள்,வாகமன் ஏரி,வாகமன் நீர்வீழ்ச்சி ,வாகமன் புல்வெளிகள்,பைன் காடுகள் ஆகிய இடங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
வாகமண்ணில் புகழ்பெற்ற பாராகிளிடிங் :
சாகச விளையாட்டான பாரக்ளிடிங் கேரளாவில் வாகமனில் மட்டுமே இருக்கிறது . பாராக்ளிடிங் செய்வதற்கு ஏற்ற மலை அமைப்பும் பருவநிலையும் இங்கு மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. இயற்கை அழகை ரசிக்க விரும்பும் இயற்கை காதலர்கள் வாகமண் பாராகிளிடிங்கில் பறந்து செல்லுங்கள்.
கேரளா மலையேற்றம் :
சிறந்த மலையேற்றம் விரும்புவர்களும் வாகமண் சிறந்த இடமாக கருதப்படுகிறது.
பசுமை பள்ளத்தாக்குகளின் வழியே மலையேற்றத்தில் ஈடுபடுவது இயற்கை ரசிகர்களை பரவசமூட்டக்கூடிய சாகசப்பயணமாக இருக்கும். மலையேற்றத்தின் போது பல விதமான அருவிகளையும் இங்கே காணலாம்.
பைன் காடுகள் :
வாகமண்ணில் மற்றொரு சிறந்த இடம் பைன் காடுகளாகும். இயற்கையின் அழகில் மயங்க விரும்பும் ஆர்வலர்கள் கட்டாயம் பைன் காடுகளையும் பாருங்கள். இது புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற இடம்.
மிக சிறந்த சினிமா படப்பிடிப்பு தளமாக வாகமண் இருக்கிறது. தங்க மீன்கள் படத்தில் வரும் ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடல் மற்றும் பையா படத்தில் அடடா மழைடா ,அட மழைடா என்ற பாடல்கள் இங்கு படமாக்கபட்டவை.
வாகமன் செல்வது எப்படி?
பேருந்து மற்றும் காரில் வாகமண் செல்ல விரும்பினால் தென்காசி புனலூர் பத்தணம்திட்டா வழியாக வாகமண் செல்லலாம்.மற்றொரு வழி தேனி கூடலூர் குமுளி வழியாகவும் வாகமண் செல்லமுடியும்.
தொடர்வண்டியில் (Train) செல்ல விரும்பும் மக்கள் கோட்டயம் சென்று அங்கிருந்து அரசு தனியார் பேருந்தில் எளிதாக வாகமண் செல்ல முடியும். கோட்டயத்தில் இருந்து 64 கிமீ தொலைவில் வாகமண் உள்ளது.
கொட்டி கிடக்கும் அழகை ரசிக்க விரும்பும் இயற்கை காதலர்கள் வாழ்வில் ஒருமுறையாவது வாகமண் செல்லுங்கள்.மேற்கு தொடர்ச்சி மலைகளின் பள்ளத்தாக்குகள் மற்றும் அதன் நில அமைப்பு இயற்கையை விரும்பும் ஆர்வலர்களையும் புகைப்பட கலைஞர்களையும் தன் அழகால் மதிமயங்கச் செய்யும்.
T.Raja M.Sc.M.Ed (Tenkasi Weatherman)
Good
Thanks