உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கூடலூர் ஊசி பாறை காட்சி முனை
ஊசி பாறை காட்சி முனை என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் கூடலூரில் அமைந்துள்ள ஒரு அழகிய சுற்றுலாதலம் ஆகும் .இக்காட்சி முனை 360° பார்வை அளிக்கக்கூடியது இந்த காட்சி முனை ஊசி மாலை என்று அழைக்கப்படுகிறது. அதன் கூண்டு வடிவத்தின் காரணமாக ஊசி மாலை என்று அழைக்கப்படுகிறது.
ஊசி பாறை காட்சி முனை தமிழ்த் திரைப்படங்களில் படப்பிடிப்பு காட்சிகளில் அதிகம் இடம்பெற்றுள்ளது. இந்த ஊசி பாறை காட்சி முனை சின்ன பூவே மெல்லப் பேசு என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் பிரபலமானது. அமைதியான இயற்கைச் சூழலை விரும்பும் இயற்கை ஆர்வலர்கள் இந்த இடத்திற்கு அதிகம் வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த காட்சி முனையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு நுழைவு கட்டணமாகக் குழந்தைகளுக்கு 10 ரூபாயும், பெரியவர்களுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
யார் யார் செல்லலாம்?
மன அமைதியை விரும்பும் மக்கள் இந்த கூடலூர் பகுதிக்கு வரலாம். கடினமான வாழ்க்கை சூழலில் வாழும் மக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இங்கு செல்ல கூடிய இடம். மேலும் புகைப்படம் எடுக்க மிக அழகான இடமாக இது கருதப்படுகிறது.
எப்படி செல்வது?
ஊட்டியில் இருந்து 51 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கூடலூர் . கூடலூரில் இருந்து 8 கிமீ தொலைவில் சென்றால் ஊசிமுனை காட்சி பகுதியை அடையலாம்.
தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தினசரி இரவு 7 மணிக்கு நெல்லையில் இருந்து ஒரு அரசு பேருந்தும் தென்காசியில் இருந்து ஒரு அரசு பேருந்தும் கூடலூருக்கு செல்கிறது.
எப்போது செல்லலாம்?
கூடலூர் காட்சிமுனை பகுதிக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா செல்லலாம். இருந்தாலும் ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில் இந்த பகுதியை பார்வையிட பிரம்மிப்பாக இருக்கும். மேக கூட்டங்களின் நடுவே மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகை ரசிக்கலாம். இந்தபகுதிக்கு செல்லும் மக்கள் கட்டாயமாக ரெயின்கோட் குடை ஆகியவற்றை கட்டாயம் எடுத்து செல்லவும்.
-Tenkasi Weatherman