Back
Regional Wise

விவசாயிகளுக்கான வானிலை அறிவிப்பு

  • time : 2024-03-17

காற்று வீசும் திசையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக காற்று முறிவு ஏற்பட்டு மார்ச் 21,22 ஆகிய நாட்களில் தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவும். 

தென்காசி கடையநல்லூர் பண்பொழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நெல் அறுவடைப்பணிகள் நடந்து வருகிறது. இந்த அறுவடைப்பணிகளை துரிதப்படுத்தவும். இதுவரை அறுவடை செய்யாமல் இருக்கும் விவசாயிகள் நாளையே அறுவடைப்பணிகளை தொடங்கி வரும் புதன் கிழமைக்குள் அறுவடைப்பணிகளை முடிக்கவும். 

இது கோடைகால மழை என்பதால் பகல் நேரங்களில் தெளிவான வானத்துடன் அதிக வெயிலும் மாலை இரவு நேரங்களில் மட்டுமே மழை பெய்யும். தொடர்மழையோ மிக கனமழையோ பெய்யாது.  இந்த மழை 15 முதல் 30 நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும். 

மழையின் போது தரைக்காற்று பலமாக வீசும். தரைப்பகுதியை தாக்கும் அளவிற்கு இடி மின்னலும் வலுவாக இருக்கும் என்பதால் மழை நேரங்களில் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டாம். 

எந்தெந்த பகுதிகளில் மழை ?

மார்ச் 21,22 ஆகிய தேதிகளில் தெற்கு கேரளா மற்றும் தென் தமிழக மலை மாவட்டங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது . குறிப்பாக குமரி தென்காசி மாவட்டங்களில் மழை பெய்யும்.

-Tenkasi Weatherman.

Write Reviews

0 reviews