தீவிரமடைகிறது வடகிழக்கு பருவமழை
வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ள நிலையில் நாளை தமிழக கடலோரத்தை நெருங்கும் மேலும் இக்காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழகத்தின் ஊடாக அரபிக்கடல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் எந்தெந்த பகுதிகள் எந்த தேதிகளில் மழை பெறும் என்பதை விரிவாக காணலாம்.
11-12-2024 (புதன்கிழமை) நாளைய தினம் டெல்டா மாவட்டங்களில் மழை துவங்கும். குறிப்பாக தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு. பிற வட கடலோரத்தை ஒட்டிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும.
12-12-2024 (வியாழன்கிழமை) - சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு கடலூர் விழுப்புரம் தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை புதுக்கோட்டை ஆகிய கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் கடலோரத்தை ஒட்டிய உள் மாவட்டங்களான இராணிப்பேட்டை காஞ்சிபுரம் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி அரியலூர் பெரம்பலூர் திருச்சி சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகும்.
மேலும் வேலூர் திருப்பத்தூர் நாமக்கல் சேலம் தர்மபுரி மதுரை இராமநாதபுரம் கோவை ஈரோடு திருப்பூர் நீலகிரி திண்டுக்கல் தேனி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். விருதுநகர் குமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. தென்கோடி மாவட்டங்களை பொறுத்தவரை விளாத்திகுளம் எட்டயபுரம் கோவில்பட்டி கழுகுமலை கயத்தாறு சிவகிரி திருவேங்கடம் சங்கரன்கோவில் வாசுதேவநல்லூர் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யும். பிற தென்கோடி பகுதிகளில் டிசம்பர் 12 மழைக்கு வாய்ப்பு இல்லை.
13-12-2024 -வெள்ளிகிழமை - தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும். குறிப்பாக தென் மாவட்டங்களான தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி இராமநாதபுரம் விருதுநகர் மதுரை தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும். மேலும் கொங்கு மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு.
14-12-2024 -சனிகிழமை - தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி இராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
தென் மாவட்டங்களுக்கான சிறப்பு அறிவிப்பு :
இந்த சுற்றில் டெல்டா மாவட்டங்கள் நல்ல மழையை பெறும் மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் கணிசமான மழை பதிவாகும். தென் கடலோர மாவட்டங்களை பொறுத்தவரை காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடல் செல்லும் போது தென் மாவட்டங்களில் மழை அதிகரிக்கும். குறிப்பாக டிசம்பர் 12 ம்தேதி மதுரை சிவகங்கை திண்டுக்கல் இராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் டிசம்பர் 13,14 தூத்துக்குடி நெல்லை தென்காசி உள்ளிட்ட அனைத்து தென் தமிழக மாவட்டங்களிலும் மழை பெய்யும்.
-Tenkasi Weatherman
Super sir.....