தீவிரமடைகிறது வடகிழக்கு பருவமழை. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை பூமத்திய ரேகை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இக்காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கை தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய புயல் சின்னம் காரணமாக இன்று டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை புதுக்கோட்டை இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை ஆகிய கடலோர மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் மழை துவங்கும்.இன்று இரவு மிக கனமழை பதிவாக வாய்ப்பு
நாளைய தினம் தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு. கடுமையான மழை பற்றாக்குறையை சந்தித்த டெல்டா மாவட்டங்களுக்கு இம்மழை ஒரு வரபிரசாதமாக அமையும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தென்மேற்கு வங்ககடல் இலங்கை தென்கிழக்கு அரபிக்கடல் குமரி கடல் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடலோர பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
பள்ளி கல்லூரி மாணவர்களே இன்று இரவு டெல்டா தென் கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்பதால் நாளை பல மாவட்டங்களுக்கு விடுமுறை விட வாய்ப்புள்ளது.குறிப்பாக டெல்டா மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு வர வாய்ப்புள்ளது.
-Tenkasi Weatherman
ராஜா சார் நான் உங்களுடைய whatsapp குரூப்பில் சமீப காலமாக சேர்ந்தேன் ஆனா உங்களுடைய கணிப்பு ஒவ்வொன்றும் கரெக்டா இருந்தது உங்க வெதர் காஸ்ட் பார்க்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் தேங்க்யூ