தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள சிறிய கடற்கரை கிராமம் ‘தனுஷ்கோடி’, அதன் பெயரைப்போலவே தமிழகத்தின் அல்லது இந்தியாவின் கடைக்கோடியில் உள்ளது என்று கூட கூறலாம். இங்கிருந்து இலங்கை வெறும் 15 கிமீ தொலைவில் உள்ளது.
.தமிழ்நாட்டின் பரந்த கடற்கரையில் மிகவும் கவர்ச்சியான அலங்காரங்களில் ஒன்று அழகிய தனுஷ்கோடி கடற்கரை. மிகவும் பிரபலமான சுற்றுலா மையமான தனுஷ்கோடி கடற்கரைக்கு உலகம் முழுவதிலுமிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்த அழகிய கடற்கரை ஒருபுறம் மன்னார் வளைகுடா மற்றும் மறுபுறம் வங்காள விரிகுடாவால் சூழப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தெற்கு முனையில் அமைந்துள்ள இந்த அற்புதமான கடற்கரை தலமானது வரலாறு, தொன்மங்கள் மற்றும் அழகு நிறைந்த இடமாகும்.
கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி நள்ளிரவு புயலால் தனுஷ்கோடி என்ற நகரமே மொத்தமாக சிதைந்த நிலையில் 1964 நிகழ்வுக்கு பிறகு தனுஷ்கோடியில் மனிதர்கள் வசிக்க இன்றுவரை அனுமதி தரப்படவில்லை. ஆனாலும், ராமேஸ்வரம் வரும் சுற்றுலாபயணிகள் தவறாமல் தனுஷ்கோடிக்கும் சென்று அழிவின் எச்சங்களை காண தவறுவதில்லை.