நெல்லை தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு
ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்று காரணமாக இன்று நெல்லை தென்காசி விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும். நெல்லை தென்காசி மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி இராமநாதபுரம் தூத்துக்குடி தேனி மதுரை ஆகிய தென் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை மானவாரி இடங்களான விளாத்திகுளம் கோவில்பட்டி கயத்தாறு எட்டயபுரம் பசுவந்தனை ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும்.
தெற்கு கடலோர பகுதிகளான இராமேஷ்வரம் முதல் உவரி கூடன்குளம் வரை கடலோர பகுதிகளில் இன்று இரவு கனமழையை எதிர்பார்க்கலாம். நேற்று மழை பெய்யாத அனைத்து இடங்களிலுமே இன்று மழை பெய்யும்.
தென் மாவட்டங்களில் மழையின் போது தரைக்காற்று பலமாக வீசும். இடி மின்னலுடன் வலுவான மழை பெய்யும். எனவே இடி மின்னலின் போது திறந்த வெளியில் நிற்பதை தவிர்க்கவும்.
-Tenkasi Weatherman.