heavy-rainfall-alert

தென் மாவட்டங்களில் அதி தீவிர கனமழை எச்சரிக்கை

  • time: 2024-12-12

தென் கடலோர மாவட்டங்களில் அதி தீவிர கனமழை எச்சரிக்கை 

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடல் பகுதியில் நீடிக்கிறது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுகுறைந்து  காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி குமரி கடல் வழியாக அரபிகடல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் தென் மாவட்டங்களில் மழை தீவிரமடைந்து காணப்படும். குறிப்பாக நெல்லை தூத்துக்குடி தென்காசி இராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் மிக கனமழையும் ஒரு சில இடங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்புள்ளது. 

நெல்லை மாவட்டத்தின் தெற்கு பகுதிகள் மற்றும் குமரி மாவட்டத்திலும் இன்று இரவுமழை பெய்யும்.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். பாபநாசம் மணிமுத்தாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளான செங்கல்தேரி மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து குதிரைவெட்டி ஆகிய மலைப்பகுதியில் 200 மிமீக்கு மேல் பெருமழை பதிவாக வாய்ப்புள்ளது. எனவே அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும். 

இம்மழையால் தென் தமிழக மாவட்டங்களில் மழை பற்றாக்குறை படிப்படியாக நீங்கும்.
தற்போது மாலை 6.30 மணி நிலவரப்படி நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 110 மிமீ மழை பதிவாகியுள்ளது. 

-Tenkasi Weatherman. 

heavy-rainfall-alert

இராமேஷ்வரம் திருச்செந்தூர் கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2024-11-22

கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு 

தமிழ்நாட்டில் இன்று பெரும்பாலான இடங்களில் மழை குறைந்து காணப்பட்டாலும் கடலோர பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. இன்று நாகப்பட்டினம் மயிலாடுதுறை இராமநாதபுரம் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

 குறிப்பாக மயிலாடுதுறை கோடியக்கரை வேதாரண்யம் தரங்கம்பாடி இராமேஷ்வரம் இராமநாதபுரம் பாம்பன் தங்கச்சிமடம் தூத்துக்குடி காயல்பட்டினம் திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் பெரியதாழை குட்டம் உவரி கூடன்குளம் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்று இரவு மிதமான மழை பெய்யும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென்காசி விருதுநகர் மதுரை உள்ளிட்ட பிற தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் மழைக்கு வாய்ப்பு இல்லை.

-Tenkasi Weatherman.

heavy-rainfall-alert

டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2024-11-17

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்று காரணமாக கடந்த 4 நாட்களாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் மிக அதிகமான நெல்லை மாவட்டம் நாலுமுக்கு 105 மிமீ மழை பதிவாகியுள்ளது.கிழக்கு திசை காற்றின் மூலம் கடந்த 4 நாட்களில் மட்டும் மாஞ்சோலை மலைப்பகுதி 401 மிமீ மழையை பெற்றுள்ளது. 

இன்றைய வானிலை நிலவரத்தை பொறுத்தவரை வட மாவட்டங்களில் மழை குறையும் தென் மாவட்டங்களில் மழை தொடரும் : 

வறண்ட வாடை காற்று தமிழகத்தில் ஊடுறுவதால் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் வேலூர் திருப்பத்தூர் தர்மபுரி கிருஷ்ணகிரி இராணிப்பேட்டை ஆகிய வட மாவட்டங்களில் குளிரும் பனிப்பொழிவின் தாக்கமும் படிப்படியாக அதிகரிக்கும் இதே நிலை அடுத்த ஒரு வாரத்திற்கு தொடரும். 

 தென் மாவட்டங்களை பொறுத்தவரை இன்று மாலை நேரங்களில் நெல்லை தென்காசி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். தமிழக கடலோர பகுதியை பொறுத்தவரை கடலூர் விழுப்புரம் தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை புதுக்கோட்டை இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை ஆகிய கடலோர மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு.


அரியலூர் பெரம்பலூர் விருதுநகர்  மதுரை சிவகங்கை ஆகிய உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

தற்போது பகல் நேரங்களில் வெயில் காணப்பட்டாலும் மாலை நேரங்களில் நல்ல மழை பெய்யும். இராமேஷ்வரம் பாம்பன் தனுஷ்கோடி தங்கச்சிமடம் தூத்துக்குடி காயல்பட்டினம் திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் உவரி கூடன்குளம் ஆகிய இடங்களில் இன்று இரவு  கனமழை பெய்யும். 

நெல்லை மலைப்பகுதிகளான மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து ஆகிய இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.

-Tenkasi Weatherman. 

நமது வாட்சப் குழுவில் இணைய விரும்பும் மக்கள் தங்கள் ஊர் பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றின் விவரங்களை 9443687841 என்ற வாட்சப் எண்ணிற்கு அனுப்பவும். 

For More updates : www.tenkasiweatherman.com