Back
temple-details

தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை

  • time : 2024-04-15

தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு 

ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசைக்காற்று தென் தமிழகம் வழியாக செல்வதால் தென் தமிழக மாவட்டங்களில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக மழை தொடர்கிறது. இன்றும் நெல்லை தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் மிதமான மழை பதிவானது. 

தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். 

தற்போது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடலோர பகுதியில் வலுவான மழை மேகங்கள் உருவாகி வருகிறது இம்மேகங்கள் அடுத்த சில மணி நேரங்களில் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இன்று இரவு தூத்துக்குடி நெல்லை இராமநாதபுரம் கன்னியாகுமரி ஆகிய தென் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். சில இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. 

இராமேஷ்வரம் தங்கச்சிமடம் தூத்துக்குடி திருச்செந்தூர் காயல்பட்டினம் குலசேகரன்பட்டினம் உவரி கூடன்குளம் திசையன்விளை ராதாபுரம் பெரியதாழை படுக்கப்பத்து குட்டம் ஆகிய கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகும். 

தென்காசி விருதுநகர் மாவட்டத்திலும் மிதமான மழைக்கு வாய்ப்பு. நெல்லை மலைப்பகுதிகளான களக்காடு திருக்குறுங்குடி மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து மணிமுத்தாறு பாபநாசம் ஆகிய இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு 

-Tenkasi Weatherman.

Write Reviews

0 reviews