(Posted on 23-10-2024) கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை
காற்று முறிவு காரணமாக தமிழகத்தின் கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி விருதுநகர் மதுரை தேனி திண்டுக்கல் கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு ஆகிய 12 மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும். சில இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
கனமழையை பொறுத்தவரை கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும். மிக கனமழையை பொறுத்தவரை இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி ஆகிய 5 தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை வழங்கப்படுகிறது.
Enjoy the rains
மேலும் வானிலை தொடர்பான தகவல்களுக்கு www.tenkasiweatherman.com என்ற இணையதளத்தை பார்வையிடவும்.
-Tenkasi Weatherman