Back
temple-details

தென் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை

  • time : 2024-11-08

தெற்கு கடலோர மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை 

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வரும் மணி நேரங்களில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்று நெல்லை தூத்துக்குடி தென்காசி இராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்யும். குறிப்பாக மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து கோதையாறு செங்கோட்டை மேக்கரை ஆகிய மலை பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு.

கிழக்கு கடற்கரை சமவெளி பகுதிகளான இராமநாதபுரம் இராமேஷ்வரம் பாம்பன் தங்கச்சிமடம் தூத்துக்குடி ஆத்தூர் காயல்பட்டினம் திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் மணப்பாடு உவரி கூடன்குளம் ராதாபுரம் திசையன்விளை ஆகிய கடலோர பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு குமரி மாவட்டத்திலும் இன்று மழை தொடரும். 

இன்று மாலை முதல் இராமநாதபுரம் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும் 

Note : தென் தமிழக மாவட்டங்களில் இன்று ஒருநாள் மட்டுமே மழை பெய்யும். நாளை முதல் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை.

-Tenkasi Weatherman. 

Write Reviews

1 reviews

  • Ganesan
    4 months & 26 days ago

    Excellent weather report, thanks for your information

    Admin Reply