தென் மாவட்டங்களில் மழை தொடரும்
ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசைகாற்று காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இன்று இரவு தென் தமிழக மாவட்டங்களில் கனமழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இரவு தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும். இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களிலும் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடல் பகுதியில் வலுவான மழை மேகங்கள் உருவாகும் இதனால் நெல்லை தூத்துக்குடி கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும். இராமேஷ்வரம் பாம்பன் தூத்துக்குடி திருச்செந்தூர் காயல்பட்டினம் குலசேகரன்பட்டினம் உவரி ஆகிய கடலோர பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பதிவாகும்.
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து ஆகிய மலைகிராமங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்புள்ளது.
-Tenkasi Weatherman.
Gud na