தென் தமிழக மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்று காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை புதுக்கோட்டை இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை குமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். பொதுவாக கடலோர பகுதி என்றாலே இரவு அதிகாலை நேரங்களில் மட்டுமே மழை பெய்யும்.
மேலும் இன்று மாலை அரியலூர் பெரம்பலூர் திருச்சி சிவகங்கை விருதுநகர் தென்காசி
தேனி திண்டுக்கல் கோவை நீலகிரி மதுரை ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் இன்று மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
தென் மாவட்டங்களுக்கான சிறப்பு வானிலை அறிவிப்பு :
தென் மாவட்டங்களை பொறுத்தவரை மாஞ்சோலை மலைப்பகுதி தமிழக அளவில் அதிகமழையை பெற்று வருகிறது. இன்றும் தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கலாம். தென்காசி மாவட்டத்தில் இன்று வலுவான மழை பெய்யும்.
நெல்லை மாவட்டத்தில் இன்றும் பரவலாக மழை பதிவாகும். மாவட்டத்தின் மலைப்பகுதிகளான மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து ஆகிய இடங்களில் மிக கனமழை பெய்யும்.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்டத்தின் கடலோர பகுதிகளான தூத்துக்குடி காயல்பட்டினம் திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் ஆகிய இடங்களில் இன்று இரவு நள்ளிரவு நேரங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
நீண்ட நாட்களுக்கு பிறகு விருதுநகர் மாவட்டத்திலும் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு.
-Tenkasi Weatherman.
மழை மழையாகவே இருக்கிறது.
தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மழை என்பது ஒரு சாதாரண வானிலை நிகழ்வு அல்ல அது நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய விலைமதிப்பற்ற வளமாகும்.
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
மழை
மழையாகவே இருக்கிறது
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
உன் மீதான காதல் ஈரமாய்
அப்படியே இருக்கிறது
-Tenkasi Weatherman.