தென் கடலோர மாவட்டங்களில் அதி தீவிர கனமழை எச்சரிக்கை
இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடல் பகுதியில் நீடிக்கிறது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுகுறைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி குமரி கடல் வழியாக அரபிகடல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் தென் மாவட்டங்களில் மழை தீவிரமடைந்து காணப்படும். குறிப்பாக நெல்லை தூத்துக்குடி தென்காசி இராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் மிக கனமழையும் ஒரு சில இடங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்புள்ளது.
நெல்லை மாவட்டத்தின் தெற்கு பகுதிகள் மற்றும் குமரி மாவட்டத்திலும் இன்று இரவுமழை பெய்யும்.
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். பாபநாசம் மணிமுத்தாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளான செங்கல்தேரி மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து குதிரைவெட்டி ஆகிய மலைப்பகுதியில் 200 மிமீக்கு மேல் பெருமழை பதிவாக வாய்ப்புள்ளது. எனவே அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும்.
இம்மழையால் தென் தமிழக மாவட்டங்களில் மழை பற்றாக்குறை படிப்படியாக நீங்கும்.
தற்போது மாலை 6.30 மணி நிலவரப்படி நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 110 மிமீ மழை பதிவாகியுள்ளது.
-Tenkasi Weatherman.