தாகத்தை தீர்க்க வரும் கோடைமழை
தமிழ்நாட்டில் குளிர்காலம் விரைவில் முடிவுக்கு வரும் நிலையில் கோடைகாலம் துவங்க உள்ளது. மார்ச் 1 முதல் மே 31 வரையிலான காலக்கட்டமே தமிழ்நாட்டிற்கு கோடைகாலம் ஆகும். இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் .மாநிலத்தில் எங்குமே மழைக்கான வாய்ப்பு இல்லை.
தற்போதைய நிலையில் தமிழகத்தை விட கேரளா மாநிலத்தில் வெப்பநிலை உயர்ந்துள்ளது. ஈரப்பதம் இல்லாத வறண்ட கிழக்கு திசை காற்று வீசும் என்பதால் மார்ச் ஏப்ரல் மாதங்களில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வெப்பநிலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி தென்காசி தேனி கோயம்புத்தூர் திருப்பூர் திண்டுக்கல் நெல்லை ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும்.
தமிழகத்தின் உள்மாவட்டங்களான விருதுநகர் மதுரை திருச்சி கரூர் நாமக்கல் வேலூர் திருப்பத்தூர் சேலம் ஆகிய இடங்களிலும் வெயில் அதிகரித்தே காணப்படும். இந்த கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரித்தாலும் தமிழ்நாட்டில் மழையும் அதிகரித்தே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இந்தாண்டு கோடைமழை அதிகளவு பெய்யும்.கன்னியாகுமரி தென்காசி நெல்லை தேனி திண்டுக்கல் கோயம்புத்தூர் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நல்லமழை பெய்யும். இந்தாண்டு கோடைமழை நல்ல அளவில் பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் மா விளைச்சல் அதிகரிக்கும். மிக விரைவாக மாங்காய் பழுப்பதற்கும் இந்த மழை உதவும்
இந்த நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இக்காற்று சுழற்சி இம்மாத இறுதியில் தமிழகத்தை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மார்ச் முதல் வாரத்தில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
-Tenkasi Weatherman