நெல்லையில் மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய மகாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள் .இந்த புனித நாளில் உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறட்டும்.
தெற்கு வங்க கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக இன்று நெல்லை தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு .
இன்று மாலை இரவு நேரங்களில் திருநெல்வேலி தென்காசி மாவட்டம் முழுவதும் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்யும். குறிப்பாக சிவகிரி வாசுதேவநல்லூர் புளியங்குடி கடையநல்லூர் தென்காசி குற்றாலம் செங்கோட்டை புளியரை பண்பொழி மேக்கரை ஆலங்குளம் விகேபுதூர் சுரண்டை மாறாந்தை பாவூர்சத்திரம் ஆம்பூர் பொட்டல் புதூர் கடையம் ஆழ்வார்குறிச்சி அம்பாசமுத்திரம் விகேபுரம் பாபநாசம் மணிமுத்தாறு சேர்வலாறு காரையார் கல்லிடைகுறிச்சி சேரன்மகாதேவி முக்கூடல் பாப்பான்குளம் வீரவநல்லூர் களக்காடு திருக்குறுங்குடி வள்ளியூர் நாங்குநேரி மானூர் தேவர்குளம் கயத்தாறு உள்ளிட்ட அனைத்து இடங்களிலுமே இன்று மாலை நேரங்களில் கனமழை பெய்யும்.
குற்றால அருவிகளில் இன்று இரவு முதல் நீர்வரத்து அதிகரிக்கும். மேலும் மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து ஆகிய மலைகிராமங்களிலும் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு .
குமரி மாவட்டத்தை பொறுத்தவரை கோதையாறு திங்கள்நகர் தக்கலை குழித்துறை மார்த்தாண்டம் பேச்சிப்பாறை பெருஞ்சாணி பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.
விருதுநகர் இராமநாதபுரம் மாவட்டத்திலும் இன்று மழை பெய்யும். .ஸ்ரீவில்லிபுத்தூர் இராமேஷ்வரம் பாம்பன் இராஜபாளையம் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.
நெல்லையில் கனமழைக்கு வாய்ப்பு
நெல்லை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று நல்ல மழை பெய்யும். குறிப்பாக பாளையங்கோட்டை சமாதானபுரம் ஹைகிரவுண்ட் வண்ணாரப்பேட்டை டவுண் மேலப்பாளையம் தச்சநல்லூர் சுத்தமல்லி ஆகிய இடங்களில் இன்று மாலை இரவு நேரங்களில் கனமழை பெய்யும்.
மகாசிவராத்திரியான இன்று தென் தமிழக மக்கள் கோவிலுக்கு செல்லும் போது கையில் குடை மற்றும் ரெயின்கோட் ஆகியவற்றை மறக்காமல் எடுத்து செல்லவும்.
-Tenkasi Weatherman.