தென் மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை
இலங்கை அருகே நீடித்த காற்று சுழற்சியானது இன்று குமரி கடல் அருகே நகர்ந்துள்ளது. இதன் காரணமாக நெல்லை தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
இன்றைய தினம் தூத்துக்குடி நெல்லை தென்காசி இராமநாதபுரம் கன்னியாகுமரி விருதுநகர் சிவகங்கை மதுரை தேனி திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலும் இன்று கனமழை பெய்யும்.
மதுரை மண்டலத்தை பொறுத்தவரை கொடைக்கானல் மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் இராஜபாளையம் பகுதிகளிலும் இன்று மழை கொட்டி தீர்க்கும். நெல்லை மண்டலத்தை பொறுத்தவரை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் நெல்லை தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து ஆகிய இடங்களில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தென்காசி திருச்செந்தூர் காயல்பட்டினம் குலசேகரன்பட்டினம் பகுதிகளிலும் இன்று கனமழையை எதிர்பார்க்கலாம்.
குற்றாலம் களைகட்டும்
நமது வானிலை பக்கம் முன்பே கணித்தப்படி இன்று முதல் குற்றால அருவிகள் களைகட்டும்.மேலும் நெல்லை தென்காசியில் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து கணிசமாக அதிகரிக்கும்.
-Tenkasi Weatherman.
Your service is very helpful for everyone in our state. Particularly south tamilnadu