Back
temple-details

சிவந்திப்பட்டியில் கொட்டி தீர்த்த மழை

  • time : 2025-03-02

சிவந்திப்பட்டியில் கொட்டி தீர்த்த மழை 

மாலத்தீவு அருகே நீடித்த காற்று சுழற்சியானது வங்க கடல் ஈரப்பதத்தை தென் தமிழகத்தின் ஊடாக இழுப்பதன் காரணமாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

குறிப்பாக தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களில் அடைமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் மழை தொடரும். தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களில் இன்று பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

தமிழ்நாட்டில் மிக அதிகமான மழை நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டியில் 123 மிமீ மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தேமாங்குளம் 117 மிமீ மழையும் ஸ்ரீவைகுண்டம் 106 மிமீ மழையும் பெய்துள்ளது. தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களில் 96 இடங்களில் மிதமான மழையும் 17 இடங்களில் கனமழையும் 2 இடங்களில் மிக கனமழையும் பதிவாகியுள்ளது.

பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்வு 

நெல்லை மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக பாபநாசம் அணைக்கு நீர்வரத்து 1919 கன அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து 674 கன அடியாக உள்ளது. 

தென் மாவட்டங்களில் மழை தொடரும் : தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும். 

-Tenkasi Weatherman.

Write Reviews

0 reviews