Back
temple-details

தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

  • time : 2025-03-07

தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை 

தெற்கு வங்க கடலில் உருவாகும் காற்று சுழற்சி தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடலை நோக்கி நகரும் என்பதால் மார்ச் 11 ம்தேதி முதல் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 11 ம்தேதி தூத்துக்குடி நெல்லை தென்காசி இராமநாதபுரம் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன்  கனமழை பெய்யும். மேலும் விருதுநகர் மதுரை தேனி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

மார்ச் 12 ம்தேதி நெல்லை தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 

தென் மாவட்டங்களை பொறுத்தவரை மீண்டும் மழைக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.எனவே விவசாயிகள் தங்கள் அறுவடைப்பணிகளை மார்ச் 10 ம் தேதிக்குள் முடித்து கொள்ளவும். மேலும் அறுவடை செய்யப்பட்ட பயிர்களை மழையில் நனையாதவாறு பாதுகாப்பை பலப்படுத்தவும். 

குற்றாலம் மீண்டும் களைகட்டும் : கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் குற்றால அருவிகளில் தொடர்ந்து நீர்வரத்து இருக்கும். மார்ச் 11 ம்தேதி மீண்டும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் 11,12 ம்தேதிகளில் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. 


இடி மின்னல் அதிகரிக்கும். : மார்ச் 11 ம் தேதி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பெய்யும் மழையின் போது இடி மின்னல் வலுவாக இருக்கும் தரைக்காற்றும் பலமாக வீசும். 

தென் மாவட்ட மக்களே இது உங்களுக்கான காலம் கோடைகாலத்தில் ஒரு மழைகாலம் நன்றாக மழையை அனுபவியுங்கள்.

-Tenkasi Weatherman

Write Reviews

1 reviews

  • Vetri Vel
    28 days ago

    Good news. Super

    Admin Reply