தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடுமையான வெப்பநிலை பதிவான நிலையில் இன்று வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.
காற்று சுழற்சி காரணமாக கிழக்கு திசை காற்று வீசுகிறது எனவே தமிழ்நாட்டில் நாளை முதல் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையும் .உள் மாவட்டங்களில் இயல்பை விட 3°© வரை வெப்பநிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே நிலை அடுத்த ஒரு வாரத்திற்கு நீடிக்கும். தேர்தல் நடைபெறும் வரை தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பாகவே இருக்கும்
-Tenkasi Weatherman.