தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும்
தமிழ்நாட்டில் இந்த ஆண்டின் முதல் முறையாக நேற்று ஈரோடு மாநகரில் 109°F (43°©) வெப்பநிலை பதிவாகியுள்ளது. சேலம் நாமக்கல் கரூர் திருச்சி திருவண்ணாமலை வேலூர் திருப்பத்தூர் திருப்பூர் மதுரை உள்ளிட்ட உள் மாவட்டங்களில் கோடை வெயில் மிக தீவிரமாக உள்ளது.
இனறு திருப்பூர் ஈரோடு சேலம் நாமக்கல் கரூர் வேலூர் மதுரை திருச்சி உள்ளிட்ட உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை ஈரோடு மாவட்டங்களில் இயல்பை விட 5°© அதிகரித்து காணப்படும்.
அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் உள்ள பகுதிகளில் அதிகப்படியான புழுக்கம் ஏற்படும்.
கடலோர மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கும்.
கடல் காற்று வீசுவதில் தாமதம் ஏற்படும் என்பதால் தமிழக கடலோர மாவட்டங்களிலும் வெப்பநிலையின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். மேற்கு திசை காற்று வீசுவதால் கேரளா மாநிலங்களில் வெப்பநிலை குறையும். கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களிலும் படிப்படியாக வெப்பநிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-Tenkasi Weatherman.