தமிழ்நாட்டில் ஈரோடு சேலம் வேலூர் நாமக்கல் கரூர் தர்மபுரி திருச்சி திருப்பத்தூர் ஆகிய உள் மாவட்டங்களில் வெயில் கொளுத்துகிறது. இதே நிலை தொடரும். தென் மாவட்டங்களான நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பான அளவிலே வெப்பம் பதிவாகிறது.
இன்று தமிழ்நாட்டில் மிக அதிகமான வெப்பநிலை ஈரோட்டில் 42°© ,வேலூரில் 41.6°© வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருப்பத்தூர் 41.4°©, சேலம் 42.1°©, கரூர் 41°© வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
அடுத்த சில நாட்களை பொறுத்தவரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் . தென் கோடி மாவட்டங்களான நெல்லை தூத்துக்குடி இராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் இயல்பான அளவிலே வெப்பநிலை பதிவாகும். வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
தமிழ்நாட்டின் பிற பகுதிகளை ஒப்பிடுகையில் தென் மாவட்டங்களில் வெப்பநிலை குறைவாக பதிவாகிறது.
-Tenkasi Weatherman.