Back
temple-details

தமிழ்நாட்டில் வெப்பஅலை எச்சரிக்கை

  • time : 2024-05-01

தமிழ்நாட்டில் இன்று வெப்ப அலை வீசியுள்ளது. ஊட்டி கரூர் மாவட்டங்களில் இன்று வரலாறு காணாத வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இன்று  பதிவான வெப்பநிலை மிக அதிகப்பட்ச வெப்பநிலையாகும்.

 

இன்று பதிவான வெப்பநிலை (01-05-2024)
கரூர் பரமத்தி - 111°F
வேலூர் - 111°F
ஈரோடு - 110°F
திருச்சி - 110°F
திருத்தணி - 109°F
தருமபுரி - 107°F
சேலம் - 107°F
மதுரை நகரம் - 107°F
மதுரை விமான நிலையம் - 107°F
திருப்பத்தூர் - 107°F
நாமக்கல் - 106°F
தஞ்சாவூர் - 106°F
மீனம்பாக்கம் - 105°F
கடலூர் - 104°F
பாளையங்கோட்டை - 104°F
கோவை - 104°F
நுங்கம்பாக்கம் - 102°F
நாகப்பட்டினம் - 102°F
இராமநாதபுரம் : 96°F
தூத்துக்குடி : 93°F
ஊட்டி : 84°F
கொடைக்கானல் : 84°F

 

தமிழகத்தில் வீசும் இந்த வெப்ப அலை அடுத்த மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயல்பை விட 5°© வரை அதிகரிக்கும். அதிக வெப்பநிலை அதிக ஈரப்பதம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் அதிகமான புழுக்கம் ஏற்படும்.

 

வெப்ப அலை என்றால் என்ன ?

தமிழகமானது இந்திய தீபகற்பத்தின் பேரிடர் பாதிப்புகளுக்குள்ளாகும் பகுதிக்குள் அமைந்துள்ளது. இங்கு வானிலை மற்றும் புவியியல் சார்ந்த பேரிடர்களான சூறாவளி, வெள்ளம், நிலநடுக்கம், சுனாமி மற்றும் வறட்சி போன்றவை அடிக்கடி ஏற்பட்டு வருகின்றது. சமீபகாலமாக வெப்பநிலையில் ஏற்படும் உயர்வால் கோடை மற்றும் பருவமழைக்கு முந்தைய மாதங்களில் வெப்ப அலை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
சமவெளிகளில் 40°©  (104°F)அல்லது அதற்கு மேலாகவும், மலைப் பிரதேசங்களில் 30°© (86°F) அல்லது அதற்கு மேலாகவும், கடலோர பகுதிகளில் 37°©  (99°F )அல்லது அதற்கு மேலாகவும் வெப்பநிலை உயரும் போது வெப்பஅலை நிகழ்வு ஏற்பட்டதாக கருதப்படும்.

 

பொதுமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் :

தமிழக மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும். குறிப்பாக கர்ப்பிணிகள் முதியவர்கள் வெளியே செல்ல வேண்டாம். சாலையோர வியாபாரிகள் திறந்த வெளியில் பணிபுரியும் காவல்துறையினர் ஓட்டுநர்கள் என அனைவரும் சற்று பாதுகாப்பாக இருக்கவும். அதிக அளவு நீர் அருந்தவும். உடலில் நீர் இழப்பை தடுக்கும் வகையில் பழச்சாறு இளநீர் மோர் ஆகிய இயற்கை பானகத்தை அருந்தவும்.

தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வசதி அளிப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பேருந்து நிலையங்கள் மற்றும் சுற்றுலா தலங்களிலும் நீர்பந்தல் அமைத்தல் நல்லது.

-Tenkasi Weatherman

Write Reviews

0 reviews