தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் அனல் பறக்கும்.
நேற்று தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவானது. கரூரில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கோடை வெயில் உச்சக்கட்டமாக பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 40°© க்கு மேல் வெப்பநிலை பதிவாகும். கரூர் நாமக்கல் சேலம் வேலூர் திருப்பத்தூர் தர்மபுரி திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று 44°© வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. மதுரை திண்டுக்கல் தஞ்சாவூர் கடலூர் திருவண்ணாமலை சென்னை ஆகிய மாவட்டங்களிலும் 42°© வரை வெப்பநிலை பதிவாகும்.
தென் மாவட்டங்களான தூத்துக்குடி இராமநாதபுரம் தென்காசி கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களிலும் மிதமான வெப்பநிலையே பதிவாகும். நெல்லையில் இன்று 41°© வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் நேற்றைய வெப்பநிலை விட இன்று மிக அதிகமான வெப்பநிலை பதிவாகும். தமிழக மக்கள் இன்றும் நாளையும் பகல் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம்.
-Tenkasi Weatherman