thunder-strom-nowcost

தென்காசி கோயம்புத்தூர் கனமழைக்கு வாய்ப்பு

  • time: 2024-05-09
தென்காசியில் மழை அடுத்த சில மணி நேரங்களை பொறுத்தவரை கோயம்புத்தூர் திருப்பூர் திண்டுக்கல் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். தற்போது பொள்ளாச்சி பகுதியில் மழை பெய்து வருகிறது. வரும் மணி நேரங்களில் கோவை திருப்பூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். தெற்கே தென்காசி மாவட்டத்திலும் இன்று பெரும்பாலான இடங்களில் மழையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு. -Tenkasi Weatherman.
thunder-strom-nowcost

தென் தமிழக பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

  • time: 2024-04-29

தென் தமிழக மலைபகுதிகளில் மழை பெய்யும்.

 அம்பாசமுத்திரம்  தென்காசி செங்கோட்டை கல்குளம் விளவங்கோடு திருவட்டார் ஆகிய 6 தாலுகாவில் மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் சற்று கனமழை பெய்யும்.

மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து குதிரைவெட்டி பாபநாசம் மணிமுத்தாறு ஆகிய இடங்களிலும் நல்ல மழை பெய்யும். 

-Tenkasi Weatherman. 

thunder-strom-nowcost

தூத்துக்குடியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

  • time: 2024-04-28

தூத்துக்குடியில் மிதமான மழைக்கு வாய்ப்பு 

தூத்துக்குடி மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். 

இன்று மாலை இரவு நேரங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.

-Tenkasi Weatherman.