Back
temple-details

கோயம்புத்தூர் திண்டுக்கல் நெல்லை தென்காசி கனமழைக்கு வாய்ப்பு

  • time : 2025-03-23

கோயம்புத்தூர் கனமழைக்கு வாய்ப்பு 


இன்று உலக வானிலை ஆராய்ச்சி தினம் (World Meteorological day)

மார்ச் 23ஆம் தேதி உலக வானிலை நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. வானிலை ஆய்வாளர்களின் சேவை, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நலனுக்க அவர்கள் எந்த வகையில் உதவியாக இருக்கிறார்கள் என்பது குறித்து இந்த நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

 இயற்கை சீற்றங்களாலும், மோசமான காற்றின் தரத்தாலும் உலகில் பல்வேறு பகுதிகளில் ஆபத்தான சூழ்நிலை உருவாகியுள்ளது. அத்துடன பூமிபரப்பும் வழக்கத்தை விட வெப்பமடைந்து வருகிறது. இதன் தாக்கத்தை அனைவரும் உணர்வார்கள். இது ஒரு புறம் இருக்க மழையின் அளவில் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுவதுடன் வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளை சமாளிக்கவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிசெய்வதற்கு முன்னெச்சரிக்கைகள் தருவதில் வானிலை ஆய்வாளர்களின் பங்கு முக்கியமாக உள்ளது.

இன்றைய தினம் கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் திண்டுக்கல் கன்னியாகுமரி நெல்லை தென்காசி தூத்துக்குடி விருதுநகர் மதுரை தேனி சேலம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். கனமழையை பொறுத்தவரை கோயம்புத்தூர் திருப்பூர் திண்டுக்கல் நெல்லை தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கும் வாய்ப்பு. 

இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும்.ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்யும். தூத்துக்குடி திருச்செந்தூர் உள்ளிட்ட கடலோர பகுதி மக்களும் பகல் நேரத்தில் மழை எதிர்பார்க்க வேண்டாம்.

-Tenkasi Weatherman.

 

Write Reviews

0 reviews