Back
temple-details

நாட்டிலேயே அதிகமழையை பெற்ற திருநெல்வேலி

  • time : 2025-03-23

தென் மாவட்டங்களை விடாது துரத்தும் மழை 

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த மூன்று மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை முடிவடைந்த பின்னரும் கடந்த ஜனவரி பிப்ரவரி மாதத்தில் தென் மாவட்டங்கள் நல்ல மழையை பெற்றது. தற்போது கோடைகாலமான மார்ச் மாதத்திலும் மழை தொடர்கிறது. 


கவனம் பெறும் தென் மாவட்டங்கள்.நாட்டிலேயே அதிகமழையை பெற்ற தென் மாவட்டங்கள். 


தற்போது ஜனவரி 1 முதல் இன்று மார்ச் 23 வரையிலான காலத்தில் இந்திய நாட்டிலேயே மிக அதிகமான மழை நெல்லை மாவட்டம் மாஞ்சோலையை அடுத்த ஊத்து 1620 மிமீ மழையை பெற்றுள்ளது. அதன் பின்னர் நாலுமுக்கு 1424 மிமீ மழையும் காக்காச்சி 1225 மிமீ மழையும் பெற்றுள்ளது. 

தமிழ்நாட்டில் இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை தென்காசி ஆகிய 4 தென் மாவட்டங்கள் கடந்த மூன்று மாதங்களாகவே அதிகமழையை பெற்றிருக்கிறது. ஜனவரி 1 முதல் இன்று வரையிலான காலத்தில்  இராமேஷ்வரம் 464 மிமீ மழையும் தங்கச்சி மடம் 445 மிமீ மழையும் பெற்றிருக்கிறது. அதே போல தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி 239 மிமீ மழையும் தென்காசி மாவட்டம் ராமநதி அணை பகுதி 228 மிமீ மழையும் பெற்றிருக்கிறது.  தென் மாவட்டங்களை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்டங்களும்  நல்ல மழையை பெற்றிருக்கிறது. 


அதிகமழையை பெற இருக்கும் தென் மாவட்டங்கள் : தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமழைக்கு வாய்ப்பு 


தமிழகம் முழுவதும் கோடைவெயில் கொளுத்தி வரும் நிலையில் தென் மாவட்டங்களின் வெப்பநிலை தொடர்ந்து இயல்பை விட குறைவாகவே பதிவாகி வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி நெல்லை தென்காசி இராமநாதபுரம் மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களாகவே இயல்பை விட வெப்பநிலை குறைந்துள்ளது. 

மார்ச் மாதத்தை பொறுத்தவரை திடீர் மழை  வெயில் வானம் மேகமூட்டம் இவ்வாறு தொடர்ந்து வானிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடலோர பகுதியிலும் வடகிழக்கு பருவமழை காலம் போல மழை பெய்கிறது. இதே நிலை தொடரும். 

வரும் ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை உயர்ந்தாலும் தென் மாவட்டங்களில் கோடைமழை தீவிரமடையும். தூத்துக்குடி நெல்லை தென்காசி இராமநாதபுரம் கன்னியாகுமரி விருதுநகர் மதுரை தேனி ஆகிய தென் மாவட்டங்களில் ஏப்ரல் மாதத்தில் கோடைமழை தீவிரமாக இருக்கும். திண்டுக்கல் கோவை திருப்பூர் நீலகிரி சிவகங்கை சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களும் கணிசமான மழையை பெறும். 

தென் மாவட்ட மக்களே உங்களுக்கு மே மாதத்திலும் தீவிர கோடைமழை பெய்யும் குறிப்பாக தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மே மாதத்திலும் நல்லமழை பொழிவை எதிர்பார்க்கலாம். நன்றி 

-Tenkasi Weatherman.

 

Write Reviews

0 reviews