தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரிக்கும்
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். தமிழ்நாட்டின் வெப்பநிலை இயல்பை விட 4°© வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழையை பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும். மற்றபடி மாநிலத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு இல்லை. இதே நிலை அடுத்த 2 வாரங்களுக்கு தொடரும்.
அதிக வெப்பநிலையால் வெப்ப அழுத்தத்தைத் தூண்டும், இது வெப்ப பக்கவாதம் மற்றும் ஒற்றைத் தலைவலி போன்ற வெப்பம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கும். தோல் பிரச்சனை மற்றும் வெப்பம் தொடர்பான பிரச்சனைகள் எழும் என்பதால் அரசும் தயார் நிலையில் இருப்பது அவசியம்.மேலும் பேருந்து நிலையங்கள் கோவில்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்தமான குடிநீர் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
பொதுமக்களுக்கான வேண்டுகோள்:
பொதுமக்களை பொறுத்தவரை நண்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும். உடலில் நீரிழப்புகளை தடுக்க மோர் பதனீர் இளநீர் பழஜூஸ் லஸ்ஸி போன்ற இயற்கை குளிர்பானங்களை அதிகளவு அருந்தவும். வெளியே செல்லும் போது கட்டாயம் தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்லுங்கள். மேலும் வீட்டில் பகல் நேரத்தில் வீட்டின் ஜன்னல்களை திரைச்சீலைகளை மூடி வைப்பதன் மூலம் வீட்டிற்குள் நேரடி சூரிய ஒளியைக் கட்டுப்படுத்துங்கள். குளிர்ந்த காற்று உள்ளே வர இரவில் அவற்றைத் திறக்கவும்.
வெயில் காலங்களில் உங்களுடைய உடற்பயிற்சி நேரத்தை அதற்குத் தகுந்தபடி மாற்றுங்கள். காலையில் உங்களுடைய வழக்கமான உடற்பயிற்சி நேரத்து முன்னதாகவே குளிர்ச்சியாக இருக்கும்போதே உடற்பயிற்சி செய்யுங்கள் அல்லது உடற்பயிற்சிகளைக் கொஞ்சம் ஒத்திவைக்க முயற்சி செய்யுங்கள்.
இல்லாவிடில் உயர் இரத்த அழுத்தம் அல்லது பிற நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் வெப்ப அலைகள்ல் அவதிப்பட நேரிடும்.
பொதுமக்கள் சுற்றுலா செல்வதாக இருந்தால் ஊட்டி கொடைக்கானல் பகுதிக்கு மட்டும் செல்லவும் மற்றபடி வேறு எங்குமே தமிழகம் கேரளாவில் சுற்றுலா செல்வதை தவிர்க்கவும் ஏனெனில் அனைத்து இடங்களிலுமே வெயில் சுட்டெரிக்கும்.
-Tenkasi Weatherman.