துவங்குகிறது தென்மேற்கு பருவமழை
தற்போது தென்மேற்கு பருவமழை துவங்க சாதகமான சூழல் நிலவுகிறது இந்த நிலையில் அரபிக்கடல் பகுதியில் மே 23 ம்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்த நாட்களில் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்து மே 24 ம்தேதி கேரளா மற்றும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மழையை பொறுத்தவரை இன்று முதல் அடுத் 3 நாட்களுக்கு கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு. மேலும் கேரளாவை எல்லையாக கொண்ட தமிழக பகுதிகளான கன்னியாகுமரி தென்காசி கோவை நீலகிரியிலும் சாரல் மழை பதிவாகும்.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின்னர் மே 24 ம்தேதி முதல் கேரளா கர்நாடகா மகராஷ்டிரா கோவா ஆகிய மேற்கு கடலோர மாநிலங்களில் பருவமழை தீவிரமடையும் . தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மே 24 ம்தேதி முதல் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். குறிப்பாக நீலகிரி மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்யும்.
-Tenkasi Weatherman.