temperature-warning

சென்னையில் வெயில் கொளுத்தும்.

  • time: 2024-04-07

சென்னையில் வெயில் கொளுத்தும் 

இன்று நெல்லை தென்காசி விருதுநகர் மதுரை திண்டுக்கல் சிவகங்கை புதுக்கோட்டை தஞ்சாவூர் திருச்சி நாமக்கல் சேலம் கரூர் கோயம்புத்தூர் ஈரோடு திருப்பூர் தர்மபுரி வேலூர் திருப்பத்தூர் திருவண்ணாமலை அரியலூர் பெரம்பலூர் இராணிப்பேட்டை திருவள்ளூர் சென்னை ஆகிய 24 மாவட்டங்களிலும் வெப்பநிலையின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

சென்னையை பொறுத்தவரை மாநகரின் மேற்கு பகுதிகளிலும் கடுமையான வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-Tenkasi Weatherman.

temperature-warning

தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும்.

  • time: 2024-04-04

தமிழ்நாட்டில் இயல்பை விட மிக அதிக வெப்பநிலை பதிவாகும். 

கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இயல்பை விட வெப்பம் மிக அதிகமாக இருக்கும் .


தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிப்புக்கு என்ன காரணம்?

தற்போது எல்நினொ வலுவிழக்க துவக்கினாலும் முழுமையாக  எல்நினொ மறையவில்லை மிதமான எல்நினொ தொடர்ந்து நீடிக்கிறது. மேலும் பூமத்திய ரேகை ஒட்டியுள்ள கடல் பகுதியில் வழக்கத்தை விட அதிகமான வெப்பம் நிலவுவதாலும் இந்தியாவில் வெப்பநிலை மிக அதிகமாக இருக்கிறது. குறிப்பாக ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வழக்கத்தைவிட தமிழ்நாட்டில்  வெப்பநிலை  அதிகமாக இருக்கும் .தமிழக கடலோர மாவட்டங்களில் ஆகஸ்ட் மாதம் வரையிலும் வெப்பம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

கோடைகாலமழையை பொறுத்தவரை மார்ச் மாதத்தில் இயல்பை விட மழை குறைவாக பதிவான நிலையில் ஏப்ரல் இறுதி வாரங்களில் கோடைமழை துவங்கி மே மாதத்தில் படிப்படியாக தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தமிழ்நாட்டில் மே மாதத்தில் இயல்பை விட அதிகமான கோடைமழையை சந்திக்கும். குமரி தென்காசி நெல்லை தேனி  திண்டுக்கல் கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்கள் நல்ல மழையை பெறும். 

 

Tenkasi Weatherman. 

temperature-warning

தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தும்.

  • time: 2024-04-03

தமிழ்நாட்டில் இன்று நெல்லை தென்காசி கன்னியாகுமரி  விருதுநகர் மதுரை திண்டுக்கல் கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு நாமக்கல் சேலம் கரூர் திருவண்ணாமலை தர்மபுரி திருச்சி அரியலூர் பெரம்பலூர் வேலூர் திருப்பத்தூர் ஆகிய 19 மாவட்டங்களில் வெயில் கொளுத்தும். 

கோவை ஈரோடு நாமக்கல் கரூர் தர்மபுரி ஆகிய உள் மாவட்டங்களில் அனல் பறக்கும். பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும். 

-Tenkasi Weatherman.

temperature-warning

கொங்கு மாவட்டங்களில் கோடை வெயில் அதிகரிப்பு

  • time: 2024-03-11

இன்று (11-03-2024)  கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு கரூர் நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் 103°F (39.6°©) வெப்பநிலை பதிவாகும். பொள்ளாச்சி பரமத்தி ஈரோடு பகுதி மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்கவும். 

temperature-warning

தமிழக கடலோரங்களில் வெப்பநிலையின் தாக்கம் குறைவாகவே இருக்கும்.

  • time: 2024-03-02

கேரளாவை ஒப்பிடும் போது தமிழகத்தின் வெப்பநிலையின் தாக்கம் சற்று குறைவாகதான் உள்ளது. குறிப்பாக தமிழக கடலோர பகுதிகளில் வெப்பநிலை அறவே இல்லை. ஊட்டி கொடைக்கானலுக்கு அடுத்தப்படியாக தமிழக கடலோர பகுதிகளின் வெப்பநிலை மிக குறைவாக பதிவாகி வருகிறது. 

temperature-warning

பற்றி எரியும் ஈரோடு

  • time: 2024-02-29

29-02-2024 தமிழ்நாட்டில் நாளை மதுரை கரூர் நாமக்கல் சேலம் ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகும்.