தென்கடலோர பகுதிகளில் மழை துவங்குவது எப்போது?
நமது கணிப்பின்படி மிக சரியாக இன்று மழை துவங்கியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் தற்போது மழை பெய்து வருகிறது. தற்போது இரவு 9 மணி நிலவரப்படி தென்காசியில் 20 மிமீ மழை பதிவாகியுள்ளது.
வரும் சில மணி நேரங்களை பொறுத்தவரை நெல்லை தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் நல்ல மழை பெய்யும். களக்காடு திருக்குறுங்குடி அம்பாசமுத்திரம் பாபநாசம் விகேபுரம் மணிமுத்தாறு கல்லிடைக்குறிச்சி மாஞ்சோலை கடையம் ஆழ்வார்குறிச்சி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும்.
கடலோர பகுதிகளில் மழை எப்போது?
தற்போது மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வலுவான மழை மேகங்கள் உருவாகி வருகிறது. இன்று நள்ளிரவு மற்றும் அதிகாலையில் தென் கடலோர பகுதிகளில் கனமழை எதிர்பார்க்கலாம்.இன்று இரவு இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி ஆகிய தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
விருதுநகர் மதுரை நிலவரம்? விருதுநகர் மதுரை தேனி ஆகிய உள் மாவட்டங்களில் நாளை மாலைக்குள் கட்டாயம் மழை பெய்யும். வெப்பத்தில் இருந்து நீங்களும் தப்பித்து கொள்ளலாம்.
-Tenkasi Weatherman