heavy-rainfall-alert

தென் தமிழ்நாட்டில் கனமழை எச்சரிர்கை.

  • time: 2024-05-11

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

குமரி கடலில் காற்று சுழற்சி  உருவாக சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. வரும் 48 மணி நேரத்தில் காற்று சுழற்சி உருவாகும். இந்த புதிய காற்று சுழற்சி தென் தமிழக கடற்கரையை நோக்கி நெருங்கும் என்பதால் தமிழகத்தில் கோடைமழை தீவிரமடையும்.

இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்யும். தென் தமிழக மாவட்டங்களான இராமநாதபுரம் விருதுநகர் மதுரை திண்டுக்கல் தேனி தென்காசி நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. 
நெல்லை மலைப்பகுதிகளான பாபநாசம் முண்டந்துறை மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து குதிரைவெட்டி ஆகிய மலைப்பகுதிகளிலும் கனமழை பதிவாகும். 

இன்று நாமக்கல் சேலம் திருச்சி கரூர் தர்மபுரி கிருஷ்ணகிரி நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். கொடைகானல் வால்பாறை கூடலூர் நீலகிரி மலைப்பகுதிகளிலும் இன்று மழை எதிர்பார்க்கலாம். 


புதிய காற்று சுழற்சி கிழக்கு திசை காற்று வீசும். 

குமரி கடலில் புதிய காற்று சுழற்சி உருவாக இருப்பதால் மே 13 ம்தேதிக்கு பிறகு தமிழ்நாட்டில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். வரும் வாரத்தில் குற்றால அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. 

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.

தமிழக மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் பாபநாசம் மணிமுத்தாறு முல்லை பெரியார் வைகை உள்ளிட்ட தமிழக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். 

-Tenkasi Weatherman. 

heavy-rainfall-alert

குமரி கடலில் காற்று சுழற்சி .தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை

  • time: 2024-05-09

தமிழ்நாட்டில் ஒரு மழைகாலம்.  தீவிரமடையும் கோடைமழை 

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடல் பகுதியில் உருவாகும் காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கோடைமழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பொதுவாக கோடைகாலங்களில் தமிழ்நாட்டில் குமரி தென்காசி கோவை நீலகிரி திண்டுக்கல் ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் தான் அதிகமழை பெறும். 


இந்த நிலையில் புதிய காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் வட மாவட்டங்கள் என பெரும்பாலான மாவட்டங்களிலும் நல்ல மழை பெறும். குறிப்பாக வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரை இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை குமரி ஆகிய தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. 


மதுரை விருதுநகர் திருச்சி வேலூர் சேலம் உள்ளிட்ட உள்மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் தென்காசி தேனி ஆகிய மலைமாவட்டங்களிலும் அடுத்த 5 நாட்களுக்கு நல்ல மழையை எதிர்பார்க்கலாம். 
பொதுவாக கடலோர பகுதிகளில் நள்ளிரவு அதிகாலை நேரங்களிலும் உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மாலை இரவு நேரங்களிலும் மழை எதிர்பார்க்கலாம். 


வரலாறு சொல்வது என்ன?  மே மாத வரலாற்றில் 10 ஆண்டுகளுக்கு பிறகு அதிகமழையை சந்திக்கிறதா தமிழகம்?

2014 ம் ஆண்டு குமரி கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகாரணமாக மே 7,8 ம்தேதி தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பதிவானது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் அதீத கனமழை பதிவானது. தூத்துக்குடி இராமநாதபுரம் குமரி தென்காசி மாவட்டங்களிலும் மிக கனமழை பதிவானது.  நெல்லை மாவட்டம் பாபநாசம் பகுதியில் ஒரே நாளில்  300 மிமீ மழையும் மணிமுத்தாறு 266 மிமீ மழையும் அம்பாசமுத்திரம் 225 மிமீ மழையும் பதிவானது. நாங்குநேரி 174 மிமீ, சேரன்மகாதேவி 152 மிமீ, காயல்பட்டினம் 150 மிமீ ,கொட்டாரம் 143 மிமீ,குளச்சல் 109 மிமீ, கமுதி 106 மிமீ,நாகர்கோவில் தென்காசி 94 மிமீ மழையும் பதிவானது. மே மாத வரலாற்றில் 10 ஆண்டுகளுக்கு பிறகு அதிகமழையை தமிழகம் பெறுகிறது. 

இதே போல தற்போது குமரி கடலில் காற்று சுழற்சி உருவாகுவதால் ஒட்டு மொத்த தென் மாவட்டங்களுமே நல்ல மழை பெறும். கொங்குமாவட்டங்கள் தமிழக உள்மாவட்டங்கள் என தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களிலும் மழை எதிர்பார்க்கலாம். இந்தாண்டு தமிழகத்தில் கோடைமழை கடும் பற்றாக்குறையாக இருந்த நிலையில் வரும் நாட்களில் இயல்பை விட அதிகமழை என்ற நிலையை தமிழகம் எட்டும்.


வெப்ப அலை தொடருமா?  தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெப்பஅலை வீசிய நிலையில் இனி தமிழ்நாட்டில் வெப்ப அலை என்ற பேச்சுக்கே இடமில்லை. அடுத்த 10 நாட்களுக்கு இயல்பை விட மிக குறைவான வெப்பநிலை பதிவாகும். மழை தீவிரமடைவது எப்போது? தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். மே 12 ம்தேதி முதல் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். 

-Tenkasi Weatherman 

heavy-rainfall-alert

தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்.

  • time: 2024-05-06

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

இன்று மாலை இரவு நேரங்களில் தென்காசி தேனி திண்டுக்கல் விருதுநகர் மதுரை ஆகிய தென் மாவட்டங்களி மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் சற்று கனமழை பெய்யும். 

நாமக்கல் திருவள்ளூர் நீலகிரி மாவட்டங்களிலும் இன்று மழை எதிர்பார்க்கலாம். திருச்சி மேற்கு பகுதிகளிலும் வால்பாறை சின்னகல்லாறு மலைப்பகுதிகளிலும் இன்று பரவலாக மழை எதிர்பார்க்கலாம். நெல்லையை பொறுத்தவரை மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து குதிரைவெட்டி ஆகிய மலைப்பகுதிகளில் சற்று கனமழை பெய்யும். 

குமரியை பொறுத்தவரை மாறாமலை கோதையாறு பேச்சிப்பாறை பெருஞ்சாணி சிற்றாறு களியல் திருவட்டார் குழித்துறை உள்ளிட்ட பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யும். 

-Tenkasi Weatherman.

heavy-rainfall-alert

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு.

  • time: 2024-05-05

ஊட்டியில் கனமழைக்கு வாய்ப்பு 

இன்று நீலகிரி தர்மபுரி திண்டுக்கல் மாவட்டத்தில் மிதமான மழை பெய்யும். நாமக்கல் ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை சில இடங்களில் மழை பெய்யும். குமுளி பெரியார் ஏற்காடு கொடைக்கானல் வால்பாறை ஆகிய மலைப்பகுதிகளில் இன்றும் மழை எதிர்பார்க்கலாம். 


வங்க கடலில் புதிய காற்று சுழற்சி 
இலங்கையை ஒட்டிய குமரி கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய காற்று சுழற்சி வரும் வாரங்களில் கோடைமழையை தீவிரப்படுத்தும். கர்நாடகா எல்லையோர மாவட்டங்களில் மே 8 ம்தேதி மழை படிப்படியாக அதிகரிக்கும்.

கோடைகால மழையின் போது தரைக்காற்று பலமாக வீசும். இடி மின்னலும் வலுவாக இருக்கும். இம்மழை பொதுவாக மாலை இரவு நேரங்களில் மட்டுமே பொழியும். 

-Tenkasi Weatherman. 

heavy-rainfall-alert

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு .

  • time: 2024-04-21

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

 

தற்போது ஆழப்புழா கொல்லம் மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. காயம்குளம் கிருஷ்ணாபுரம் குலசேகரபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை . 

 

வரும் மணி நேரத்தை பொறுத்தவரை கொல்லம் ஆழப்புழா மாவட்டங்களின் உள் பகுதிகளிலும் மழை பெய்யும் . பத்தனம்திட்டா திருவனந்தபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று இரவு மழை எதிர்பார்க்கலாம்.

 

-Tenkasi Weatherman. 

 

തെക്കൻ ജില്ലകളിൽ ശക്തമായ മഴയ്ക്ക് സാധ്യത

 

നിലവിൽ ആലപ്പുഴ കൊല്ലം ജില്ലകളിലെ തീരപ്രദേശങ്ങളിൽ ഇടിയും മിന്നലോടും കൂടിയ മഴയാണ്. കായംകുളം, കൃഷ്ണപുരം, കുലശേഖരപുരം ഉൾപ്പെടെയുള്ള പ്രദേശങ്ങളിൽ നല്ല മഴ.

 

വരും മണിക്കൂറുകളിൽ കൊല്ലം ആലപ്പുഴ ജില്ലകളുടെ ഉൾപ്രദേശങ്ങളിലും മഴയുണ്ടാകും. പത്തനംതിട്ട, തിരുവനന്തപുരം ജില്ലകളിലും ഇന്ന് രാത്രി ചിലയിടങ്ങളിൽ മഴയ്ക്ക് സാധ്യതയുണ്ട്.

 

- തെങ്കാശി വെതർമാൻ.

heavy-rainfall-alert

தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை

  • time: 2024-04-15

தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு 

ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசைக்காற்று தென் தமிழகம் வழியாக செல்வதால் தென் தமிழக மாவட்டங்களில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக மழை தொடர்கிறது. இன்றும் நெல்லை தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் மிதமான மழை பதிவானது. 

தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். 

தற்போது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடலோர பகுதியில் வலுவான மழை மேகங்கள் உருவாகி வருகிறது இம்மேகங்கள் அடுத்த சில மணி நேரங்களில் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இன்று இரவு தூத்துக்குடி நெல்லை இராமநாதபுரம் கன்னியாகுமரி ஆகிய தென் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். சில இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. 

இராமேஷ்வரம் தங்கச்சிமடம் தூத்துக்குடி திருச்செந்தூர் காயல்பட்டினம் குலசேகரன்பட்டினம் உவரி கூடன்குளம் திசையன்விளை ராதாபுரம் பெரியதாழை படுக்கப்பத்து குட்டம் ஆகிய கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகும். 

தென்காசி விருதுநகர் மாவட்டத்திலும் மிதமான மழைக்கு வாய்ப்பு. நெல்லை மலைப்பகுதிகளான களக்காடு திருக்குறுங்குடி மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து மணிமுத்தாறு பாபநாசம் ஆகிய இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு 

-Tenkasi Weatherman.