(Posted on 01-11-2024 ) நெல்லை குமரி தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் கிழக்கு திசை காற்று மேற்கு திசை காற்று சந்திப்பு ஏற்பட்டுள்ளது. இரு திசை காற்று சந்திப்பு காரணமாக தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி விருதுநகர் இராமநாதபுரம் மதுரை தேனி திண்டுக்கல் கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு நீலகிரி சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை திருச்சி புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் சேலம் நாமக்கல் கரூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று பரவலான மழை பெய்யும்.
மிக கனமழையை பொறுத்தவரை தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி கோயம்புத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று பல இடங்களில் கனமழை பெய்யும். சில இடங்களில் மிக கனமழை பதிவாகும்.
கொங்கு மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களுக்கு இன்று மிக சிறந்த மழை காலமாக அமையும். தூத்துக்குடி நெல்லை தென்காசி குமரி மாவட்ட மக்கள் மழையை ரசிக்க தயாராகவும். இராமநாதபுரம் மதுரை மாவட்டங்களிலும் இன்று சிறப்பான மழை உண்டு.
இன்று மாலை இரவு நேரங்களில் தென் தமிழக மக்கள் வெளியே செல்லும் போது ரெயின் கோட் குடையுடன் செல்லுங்கள். இடி மின்னலின் போது திறந்த வெளியில் நிற்க வேண்டாம்.
-Tenkasi Weatherman.